உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெஞ்சமாக்கூடல்) திருப்புக ழ் உரை 723 திருவெஞ்சமாக்கூடல் 935. வண்டு எவ்வாறு மலர்த்தேனை (சாரத்தை) நாடிப் பருகிக் களிக்கின்றதோ அவ்வாறு நான் உன் திருவருள் என்னும் தேனை நாடவும் (மந்தி) குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்டித் திரிய வல்லதா யிருக்கின்றதோ அவ்வாறு நான் காலன் பிணிப்பை யமன் என்னைப் பாசத்தினாற் பிணிப்பதைக்கட்டுவதைத் - தாண்ட வல்லவனாமாறும் செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகையை அது மாய்க்குமோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி (வெல்லுமாறும்) (என்) மனத்தை (நீ) (மாய்த்து) அழியவைத்து - சும்மா இருக்கும் நிலையைத் தந்து - மெய்யறிவை அருள்வாயே அடியார்களாற் காணப் பெறுவோனே அடியார்களுக்குக் காட்சி அளிப்பவனே! பரிசுத்தமான (வேற்கானம்) திருவேற்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! (தொடர்ச்சி) மேரு.செருக்கு மாற.செண்டினால் அடித்துநின்றான் அடித்தலும் அசையா மேரு அசைந்து...துடித்தது' - திருவிளை-மேருவை-25. X சிந்தை மாய்தல் - மலர்ப்பூஜை மனத்தை மாய்க்கும் "மனம் பாழ் படுக்கும் மலர்ப்பூசனை செய்து வாழ்வார்" சம்பந்தர் 2-116-7. O அறிவு பெறுதல்: 'உமை உணர்பவர் கண்மதி மிகுவது கடனே" - சம்பந்தர் 3-98-1. * தொண்டர் காணப் பெறுதல்: பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர் காணும்.....காரோணத்தானே' - சம்பந்தர் 1-84-5. 11 வேற்காடு - பாடல் 684, 685 ஸ்தலக் குறிப்பைப் பார்க்க பக்கம் 76.