உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சந்தச்செக் காளநி சாசரர் வெந்துக்கத் துாளிய டாமெழ சண்டைக்கெய்த் தாரம ராபதி குடியேறத். தங்கச்*செக் கோலசை சேவக t கொங்கிற்றொக் காரவி நாசியில் தண்டைச்ச்சிக் காரயில் வேல்விடு பெருமாளே (2) 949. யமபயம் அறவரவேணும் தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனதான மனத்தி ரைந்தெழு மீளையு. மேலிட கறுத்த குஞ்சியு மேநரை யாயிட மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை தடுமாறி. வருத்த முந்தர தாய்மனை யாள்மக வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் வசைக்கு றுஞ்சொலி னால்மிக வே 繁 நகையாட: எணைக்க டந்திடு பாசமு மேகொடு சினத்து வந்தெதிர் சூலமு மேகையி லெடுத்தெ மிந்தழல் வாய்விட வேபய முறவேதான். இழுக்க வந்திடு துள்தர்க ளானவர் பிடிக்கு முன்புன தாள்மல ராகிய இணைப்ப தந்தர வேமயில் மீதினில் வரவேணும்: * செக்கோல் - செங்கோல். f அவிநாசி - கொங்கு மண்டலத்தைச் சார்ந்தது. 'பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும் பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில் ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்று கொண்டு வாவென் றழைத்த அவிநாசி சூழ்கொங்கு மண்டலமே" -கொங்கு மண்டல சதகம் 16.

  1. சிக்கார - சிங்கார,