பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுகரைநாடு) திருப்புகழ் உரை 863 (திமிலை) பறையும், (பல முருடு) பல மத்தள வகைகளும் திந்திந் திமித்திமித.திந்திந் திகுர்த்திகுர்த திகுதிதோ செகண செகண செக செஞ்செஞ் செகக்கண் என்று ஒலிக்கவும், பிரபஞ்சம் எல்லாமும், ஆதிசேடன் முடிகளும், அண்டங்களும் பிளந்து போம்படி மிக்க ேதிமிர்தம்) பேரொலியை எழுப்பும் (கூட்டமான) பல வெற்றிச் சின்னங்களைச் சங்கங்கள் (தொனித்து) ஒலி எழுப்பவும், அசுரர்களொடு பொருத போர்க்களத்திலே தேவர்கள் ஒன்றுகூடி (பொன்) மலர்கள் கொண்டு அங்கே இறைத்தருள (பூமாரி பொழிய), அருமைவாய்ந்த கோழிப்பறவையின் கொடி எங்கும் பரந்து விளங்கத், திரும்ாலும், பிரமனும், முநிவர்களும் அண்டங்களும் பிழைத்து உய்யச் செலுத்தின் வேலாயுதனே (வேலைச் செலுத்தினவனே): திருமாலின் புதல்வி வள்ளியின் கொங்கைகளிலே உனது உடல் புதையும்படிக் கூடித்திருமுக அழகுடன் திருப்புயங். களால் அவளை அணைத்து இன்பச் சுகத்தில் திளைத்து மகிழ்கின்ற பெருமாளே! அருமை வாய்ந்த மயிலுடனும் வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்னும் தலத்தில் மகிழ்கின்ற பெருமாளே! (உன் பதத்தில் எனை அருள்வாயே) 2. எழுகரை நாடு 990. (விரகு) தந்திரம் இன்றி உண்மை நிலையுடன் உன்னைக் கருதியும், (உன்னை நினைந்து) உருகியும், (உன் திருநாமங்களைக் கூறி உன்னை) வாழ்த்தியும், கண்களில் நீர் நிறைந்து வழிய, அன்பு மேலும் மேலும் (862ஆம் பக்கத் தொடர்ச்சி) "என்னை யாண்டாய்க்கு உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் வெள்ளந்தான் பாயாதால்" - திருவாசகம் - சதகம் 21.