உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருளை) திருப்புகழ் உரை 201 குமரி) பருவப் பெண்ணின் (திதலைதனம்). தேமல் பரந்த கொங்கையானது மலைக்கு (மலையுடன்) இசலி (மாறுபட்டு - போட்டிப்போட்டு) இரண்டு குடங்கள் போல விளங்கக் குவிந்துள்ள அக் கொங்கைகள் சற்று அசைய, ரத்ன ஆபரணங்கள் அசைந்தாட் - கொடிபோன்ற இடையில் பட்டாடை, (பொற் சரண நடை) அழகிய பாதங்களின் நடைமயில் செல்வதுபோல விளங்கக், கொஞ்சிப்பேசிப் பொருள் பறிக்கும் (பொது மகளிரின்) கூட்டுறவு ஆமோ (ஆகாது என்றபடி) . திமிலை (ஒருவகைப் பறை), உடுக்கு (உடுக்கை) - இடை சுருங்குபறை, முரசுப்பறை (போர்ப்பறை): திமிதித் திமிதிம் எனவும், டிமி டிமிடிட் டிகுந்திமிதித் எனவும் ஒலிக்கத் தாளம் செககண செக கன என ஒலி எழுப்பத் திடு திடு என்று சிகரங்களை உடைய எண் திசையிலுள்ள மலைகள், (அஷட கிரிகள்)அழிபடவும், (உவர்) கடல் கலங்கவும் வில்லை வளைத்து == (துமிலம்) பேராரவாரத்துடன், (உடற்று) போர்புரிந்த அசுரர்களின் முடிகள் பொடிபட, ரத்தம் உள்ள இடம் எல்லாம் பெருக விழுந்து கூடியுள்ள மாமிசங்களைத் தொட்டுப் பேய்கள் உண்ணும்படிச் செலுத்தின வேலாயுதனே! துவனி - (பகூநிஜாதிகளின்) ஒலி நிறைந்த தினைப்புனத்துக்குச் சென்று குறமகள் (வள்ளியை) களவுவழியில் மோக இன்பத்துடன் அணைத்த திருவண்ணா மலைப் பெருமாளே! (பொருட் பறிப்பவருக் குறவாமோ) 550. தாமரையின் மொட்டைக் கட்டு அவிழ்த்து அழகை இழக்கச் செய்தும், நீர்க்குமிழியை நிலைகுலைந்து உருவு இழக்கச்செய்தும், தங்கக் குடத்தையும், பொன்னாலாய கலச வர்க்கங்களை (கூட்டங்களை)யும் நொறுங்கச் செய்தும், குலை குலையாயிருக்கும் அழகு ஒழியும்படி இளநீரைக்