உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புக ழ் உரை 255 அழகு மிகுந்த, அலங்காரமான, பச்சைக் குதிரையாம் மயில் மீதேறி உலவுகின்ற சத்தியம் (ப்ரத்யகூடிமாக) வெளிப்படையாக வந்த நல்ல சற்குருபரனே! திரு அண்ணாமலையில் நான் நற்கதிகூடி அநுகூலம் அடையும்படி எனக்குத் தெளிவு (ஞானத்தை) அருளிய பெருமாளே! (திருடிகள் உறவாமோ) 551. யானை முகத்தையும் மதத்தையும் கொண்ட களிறு, சிறந்த கற்பக (விநாயகர்), மதங்கொண்ட யானைமுகத்து அசுரனை (கஜமுகாசுரனை) அடக்கிய யானை கடலை, எள், பயறு, நல்ல வாழையின் பழம், பலாப்பழம் (இவைகளை) வயிற்றினில் அடக்கின் யானை x அழகிய முகங்கொண்டவர், (அல்லது தெருச் சந்திகளில் வீற்றிருப்பவர்), எதிர்த்துப் போர்புரியும் போர்க்களத்தில் பெரிய போரைச் செய்யும் கணபதி - (இத்தகையோர்க்குத்) தம்பியே! வேலைச் செலுத்தி அசுரரின் மலையன்ன கூட்டம் அலைச்சல் உறும்படிச் சண்டை செய்து ஜயம் மிகக்கொண்ட ஆறுமுகத்துக் குமரேசனே! (25 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) தாக்க வந்தான் கணபதி அதன் முதுகில் தாவி ஏறி வீற்றிருந்து என்னைச் சுமக்குதி என்றனர். * 'நீ நமைச் சுமத்தி, என்று மேக்குயர் பிடரில் தாவி வீற்றிருந் துர்தல் உற்றான்" . கந்தபுராணம் 6:14-252. x அரி - அழகு - தெருச்சந்தி முகம் இடம்