உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புக ழ் உரை 257 நரியின் பெரிய கூட்டங்களைக் குதிரையென ஆக்கிக் கடிவாளத்தைக் கையில் பிடித்துப் (பாண்டியன்) எதிரே நடத்தின ஈசன் (சொக்கேசர்). தமது திருவிளையாடலை இந்தப் பூமியில், (இவ்வாறு நடத்தினவர் பின்னும்) சொல்லப்படும் இப் பூமியில் யானையை உரித்து அணிந்தவர் . அவருக்கு ஒப்பற்ற பிள்ளையே! (கடிவளக் கையில் பிடித்து பாண்டியன் எதிரே நடனம் இப்படி யிடத்தினும் நடத்திடும் ஈசன், இசை தரையின் மிசை கரியுரித்தணிந்தவன்-சேயே) (காய்கனிகளின்) #ØØMLD பெறுவதாற் சரியும் பொழிலிலும் (அல்லது காய்கனிகளின்) சுமையைப்பெற்ற அந்தச் சரியில் (மலைச்சாரலில்) உள்ள (பொழிலிலும்), பெருமைவாய்ந்த வயலிலும் அழகு உள்ளனவும் தூய உருவைக் கொண்டுள்ளனவுமான முத்துக்கள் நெருங்கிக் கிடக்க, மிக்கெழுந்து தேவர்கள் துதிசெய்ய மிகப் பிரபலமாய், உனது (கருணைக்) குணம் விளக்கமாய் விளங்கும் திரு அண்ணாமலையில் ஒளிவீசும் வேலேந்திய சரவணப் பெருமாளே! 552. கரிய நிறத்தைக் கொண்டனவாய், அகன்று உள்ளனவாய், பேசுவது போலப் பொலிவு உள்ளனவாய், காம சாஸ்திரத்திற் கூறப்பட்ட கடுமை, கொடுமை வாய்ந்தனவாய், (காதில் உள்ள) பொன் குண்டலத்தோடு போரிட வருவதுபோலக் காதளவும் நீண்டனவாய், வடவா முகாக்கினி படர்ந்துள்ள கடல்போலப் பரந்து அடர்ந்து தொடர்வனவாய், (அக் கடலில் தோன்றி எழுந்த விஷம்போலத்) தோன்றும் விஷம் கலந்து பிரகாசித்துக் கொப்புளிப்பனவாய், பாணத்தையும் (அம்பையும்) நின்று நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய் (தொழிலில் மிகப் பயின்றனவாய்), இளைஞர்கள் முன்னிலையில் -