பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி சீருறவு ளத்தெ ரித்த சிவவேளே. தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த தேவர்சிறை வெட்டி விட்ட பெருமாளே. (53) 562. திருவடியை மறவாமை தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதான சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும திலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் தனிலேறிச். செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக விழிசிறிப்: புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர் பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி புரிவளை கைக்குட் கலின்க லென்றிட அநுராகம். புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு புன்ரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே, கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட கணகன கட்கட் கணின்க ணென்றிட நடமாடுங்.