பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆலைக் கோதினி லீர மிலாமண நேசத் தோடுற வானவர் போலுவர் *ஆருக் கேபொரு ளாமென வேதினை வதனாலே, காருக் கேநிக ராகிய வோதிய மாழைத் தோடணி காதொடு மோதிய காலத் துரதர்கை வேலெனு நீள்விழி வலையாலே. காதற் சாகர மூழ்கிய காமுகர் மேலிட் டேயெறி t கீலிகள் 4: நீலிகள் காமத் தோடுற வாகையி லாவருள் புரிவாயே ஆரர்க் கேயொரு கோளரி யாமென நீலத் தோகைம பூரம தேறிய துாளிக் கேகடல் துார நிசாசரர் களமீதே. சோரிக் கேவெகு ரூபம தாவடு தானத் தானன தானன தானன சூழிட் டேபல Xசோகுக ளாடவெ பொரும்வேலா! வீரத் தால்வல ராவண னார்முடி போகத் தா Oனொரு வாளியை யேவிய மேகத் தேநிக ராகிய மேனியன் மருகோனே. *வேதத் தோன்முத லாகிய தேவர்கள் பூசித் தேதொழ வாழ்புலி ரினில் மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே. (33)

  • ஆருக்கே - யாராலே. t கீலிகள் - கிலகிகள்; தந்திரவாதிகள்.
  1. நீலிகள் - நீலிப்பேய் - பாடல் 27. பக்கம் 77 கீழ்க்குறிப்பைப் பார்க்க Xசோகுகள் - பேய்கள் O ஒருவாளி. அராமர் ஒரே அம்பு விடுவது. (பாடல் 452 பக்கம் 6 கீழ்க்குறிப்பு) * பிரமன் முதலான தேவர்கள் பூசித்தது.

பிரம தேவர் கங்கைக் கரையில் ஒருயாகம் செய்யக் கருதித் தில்லைவாழ் அந்தணர்களையும் தேவர்களையும் அழைத்துவரச் சொல்லி நாரத முனிவரைத் தில்லைக்கு அனுப்பினார் இங்கே பெருமானது ஆனந்த நிருத்தத்தைத் தரிசித்திருக்கும் நாங்கள் இந்த அமுதத்தை விட்டு அங்கே வருவதற்கில்லை எனத் தில்லைவாழ் அந்தணராதியோர் கூற நாரதர் இதைப் பிரமதேவருக்குச் சொல்ல, பிரமதேவர் தாமும் தில்லைக்கு வந்து திரு நடனத்தைத் தேவர்களுடன் தரிசித்தனர் என்பது தலவரலாறு . (தொடர்ச்சி 445 ஆம் பக்கம் பார்க்க)