பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 455 பொலிவு பொருந்திய மலையரசாக விளங்கும் மேரு என்னும் பெருமை வாய்ந்த மலைபோல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேலை வாயிற்புரத்தில் மயில்மீது ஏறிய வண்ணம் விளங்கும் பெருமாளே! (அடியாராகிய மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே) 626. எலும்பு, தோல், மயிர், நாடி, குழாக்களின் நெருக்கம், அல்லது நாடிகளின் கூட்ட நெருக்கம் உள் அழுந்தியுள்ள சி (சீழு), புழு, இவையுடன் பொருந்தியுள்ள மூளைகள், ரத்தக்கடல், நீர், மலம் இவையெலாம் உள்ள சேற்றுக் குளத்தில் (அல்லது மண்பாத்திரத்தில்).

  • சூரியனுக்கு இரண்டு குமாரர்கள் மனு, இயமன்" எனத் தோன்றினர். வெளிப்படப் பாவஞ் செய்தவரைத் தண்டிக்க மனுவும், வெளிப்படாமற் பாவஞ் செய்தவரை நரகத்தில் தண்டிக்க இயமனும் சிவபிரானால் நியமிக்கப்பட்டனர். மனு பூமியில் கெர்ளட தேசத்தில் இருந்து ஆண்டார். நான்கு மனுக்கள் ஆண்டபின் ஐந்தாவது மனுவுக்கு பிறந்த பிள்ளை இரணியவர்மன். மனுவின் வழித்தோன்றலாக இவன் இருந்ததாலும், வியாக்ரபாதரால் சோழேசனாக ஆக்கப்பட்டதாலும் அருணகிரியார் இவண்ை 611-ஆம் பாடலில் மத்நெறியுடன் வளர் சோணாடர்கோன் எனக் குறிப்பித்தார். ஆதலால் அப்பாடலில் சோணாடர்கோன்' என்பது ஐயமின்றி இரணியவர்மனே. இவன் வியாக்ரபாதருடனும் பதஞ்சலியாருடனும், தேவர்களுடனும் தில்லையில் திருகூத்தைத் தரிசித்திருந்தானாதலால் . 'மவுலியில் அழகிய பாதாள லோகனும்" மதுநெறியுடன் வளர்சோனாடர் கோனுடன் உம்பர்சேரும் மகபதி புகழ் புலியூர் வாழும் நாயகர்" என 611-ஆம் பாடலில் விளக்கம் தரப்பெற்றுளது.

X மூவாயிரவர் பூசனை புரிகோவே' என்றும், 611 ஆம் பாடலில் "திருதருகலவி மணாளா" - வள்ளி நாயகனே என்றும் திரிபுரம் எரிசெய்த கோவே - நடராஜப் பெருமானே என்றும் கலம்பகமாகக் கூறப்பட்டதால் . அருணகிரியார்க்கு நடராஜரே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் சற்றேனும் பேதமின்றித் தரிசனம் தரப்பட்டது என்பது வியந்து போற்றத்தக்கதொரு நிலையாம் என்க.