பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/472

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 467 630. மனம் ஒருமித்து ர்ந்த பால்போன்ற சொற்களைப் பேசுபவர்கள், கூடினபின் சுகமாய் விளையாடுபவர்கள், தாழ்வான மொழிகளைச் சொல்பவர்கள், தாம் சொன்னதையே சாதிக்கும் ப லிகள் கடுமையான - துன்பம் பிடித்தவர்போல இருப்பவர்கள், பெரிய வார்த்தைகளைப் பேசிப் பித்தளை சாமான்களைக்கூட (வந்தவரிடம்) வைக்காதவர்கள் (பித்தளை சாமான்களைக்கூட கவர்பவர்கள்), இரும்பாலாய வேல்) போன்ற கூரிய கண்களை உடைய மாதர்கள் யாராயிருந்தபோதிலும் (அவரிடம்) பணம் கவர்ந்துகொள்ளும் தந்திரம்வல்ல (உதாரிகள்) மேம்பாடு உடையோர்கள், நறுமணம் கூடியதாய்ப் பின்னிக் கட்டியுள்ள கூந்தலினின்றும் வாசனை வீசச் செய்பவர்கள், பொன்னைக் (கொடுக்கின்றேன் என்று) சொல்லித் தர (சொல்லித் தருமளவும்) மறுபடி (தமது வீட்டுக்கு) அழையாதவர்கள் ஆகிய பொதுமகளிரோடு (பதம்) இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடிய பெரிய நரகத்தை அடைந்து, பிணமாகி விடாமல் உனது திருவடியைப் பற்றி உனது திருப்புகழைக் கூற அருள்புரி Gl/ГTEL/ГТ45. வணங்குதற்கு மனம் இல்லாத ராவணனுடைய பத்துத் தலைகளும் அற்றுவிழ அம்பைச் செலுத்தி மனங் கலங்கப், பொய்யை உடைய ராக்ஷதர்களின் வலிமையை அழித்த திருமாலின் மருமகனே! ணவங்கொண்டு சண்டைசெய்த சூரபன்மன் ஆதியோரைத் (தங்கள்) குலப்பெருமை பேசிக் (கொட்டத்து) இறுமாப்புடன் பகைமைப் போர் சொல்லி வந்த மூடரைச் சூழ்ந்து வளைந்துப் போர்க்களத்திலே இறந்து போம்படி செலுத்தின வேலாயுதனே! பிணத்தைப் பற்றிக் கழுகுகளுடன் பல பேய்கள் பிடுங்கிக் கொத்தி உண்ணும்படி போர்செய்து (பகைவர்களைப்) பிளந்தழித்து பலம் (வன்மை) கொண்ட சிறந்த மயிலில் ஏறிய முருகனே!