உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 43 சேர்ந்து அளிக்க (உண்டாகின்ற) பொய்யிலேயே கிடந்த கந்தலில் (கந்தையில் - கிழிபட்ட துண்டில் அழிந்து போகும் உடலில்) இருக்கும் மூச்சை - (சுவாசத்தை) யமன் ஒட்டிச் செலுத்த ஒரு தனியான வகையில் (ஒரு கோரமான வகையில்) இழுக்கும் (அல்லது - பிராணவாயுவை ஒரு தனி வழியில் இழுத்துக்கொண்டு போகும்போது உண்டாகும் தரங்கம் (மனக்கலக்கம்) வந்து கூடாமுன் பலவித நிறங்களைப் பொருந்தியதும், அன்று போர்களத்திற் சிறந்த பூமியும் நெளியச் சென்றதுமான, வலிமை வாய்ந்த பீலிக் கண்களை உடைய படம் (தோகையாம்) போர்வையை உடைய மயிலில் ஏறிச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே! நறுமணம் மிகுந்து பெருகும் சிவந்த உனது திருவடியை எவ்வகைக் குற்றமுமில்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து அன்புடனே, சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று (நீ) மகிழ்ந்து உதவ வரமாட்டாயா! சிலையும் என (வில் என்று) பொற்சிலம்பை (பொன் மலையாம் மேருவை, முன் கையிற்கொண்டு, ബ வழிபாட்டைக் கைவிட்டுத் தமது சக்தி குலைந்த அசுரர்களைத், திரிபுரத்தை எரித்த அந்த தினத்தில் தரித்த (வில்லாக மலையைத் தரித்த) திண்ணிய (வலிய) திருக்கரத்தைக் கொண்டவள். (42 - ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) *திரிபுரம் எரித்த வரலாறு பாடல் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு tt சிலைபிடித்த கை தேவியின் கை ஆதலின், திண்கையாளி என்பது தேவியை குவடு குனித்துப் புரஞ்சுடுஞ்சினவஞ்சி நீலி..... திருப்புகழ் 464 குலவரை தனுவென புரம் நொடியினில் எரி செய்த அபிராமி- திருப்புகழ் 304 திரிபுரம் மாண்டு நீறெழ மலைசிலை ஒரு கையில் வாங்கு நாரணி-திருப்புகழ்-507.