உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 525 திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய (மூர்த்தன) ஆதிசேட மூர்த்தியாம் பதஞ்சலியும், அழகு பொலியும் பேர்பெற்ற புலியூரில் (நடராஜப்பெருமானுடைய நடன தரிசனம் கண்டு களிக்கும்) யாக்கிரபாதரும் . ஆகிய இவ்விருவரும் கூட (முருகா! உனது நடனம் (சிவனது திருக்கூத்தைவிட அதிக அருமை வாய்ந்தது என்று வியந்து கூறும்படி விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டின பெருமாளே! (ஆதி தோற்றமும் ஏற்றுவதொருநாளே!) 651. (மச்சம்) மஞ்சம் - அலங்கரித்த கட்டில், மெச்சத் தக்க ஒரு பொறி (யந்திரம்), ரத்தம், பித்தம், மூத்திரம் இவைகள் வைக்கப்பட்ட பாய்ச்சப்பட்ட ஒரு பாத்திரம் - அனுபோகம் (ஆக ஆக)- அனுபவித்தல் (ஆக ஆக) வலிகுன்றி அழியும் இடம் (இருப்பிடம்), உட்புறத்தில் புழுத்துப் போயுள்ள வாழ்க்கை, மண் இனத்தால் (மண் வகையில்) (ஆக்கப்பட்ட) ஒரு பொருள், இடிந்து விழுகின்ற பாறை; (எய்ச்சு) எய்த்து - இளைத்து, (இளைச்சு) மெலிந்த பேய்க்கும், இளைத்து மெலிந்த நாய்க்கும், இளைத்து மெலிந்த ஈக்களுக்கும் உணவாகின்ற ஒரு பொருள் இத்தகைய இந்த (கடத்தை) உடம்பை ஒழித்து அந்த சுத்த தேகத்தில் என்னைப் புகுத்தி இவ்வாறு (மோகூம்) முத்தி வீட்டை அருள்புரிக தம்மாட்டு அன்பு வைத்தவருக்குப் பொய்யாகிய அடையாளங்களை ஒழித்து மெய்யான அடையாளங்களைத் தந்து அவர்களை உனது அழகிய பாதங்களில் ஏற்றுக் கொள்ளும் புலியூரனே!