பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/576

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய

  • நெல்லி மரத்த மர்ந்த அபிராம. tவெகுமுக ககன நதிமதி யிதழி

வில்வ முடித்த நம்பர் பெருவாழ்வே. விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்த மர்ந்த பெருமாளே, (2) 662. திருவடியைப் பெற தனதண தய்ய தனதன தய்ய தனதன தய்ய தனதான குவலய மல்கு # தவலிகள் முல்லை குளிர்நகை சொல்லு முதுபாகு குழையிள வள்ளை யிடைசிறு வல்லி Xகுயமுலை கொள்ளை O விழைமேவிக்

  • இங்குக் குறிப்பிட்ட நெல்லிமரம் எங்குள்ளது என்பது விளங்க இல்லை ஆயினும் திரு ஏரக மான்மியத்தில் உள்ள பின்வரும் வரலாற்றால் சுவாமி மலையில் உள்ள நெல்லிமரம் என ஒருவாறு கொள்ளலாம்: "சிவபெருமானும் தேவியும் ஒன்றியிருந்தபோது - தேவர்கள் தாரகன் என்னும் அசுரனைக் கொல்ல வேண்டுமென்று பிரார்த்தித்தனர். சிவபிரான் தேவியை விட்டு, நீங்கித் தமது ரேதசைப் பூமி தேவியிடம் விட்டனர். "எங்கள் கிரிடைக்கு விக்கினம் பண்ணியதால் - தேவர்களே! நீங்கள் புத்திர ஹlனர். களாகப் போகக்கடவது; பூமிதேவியே! நீ பலருடைய அனுபோகத்துக்கு உரியவளாகக் கடவது" எனப் பார்வதி சாபம் இட்டனள். பூமிதேவி ஷண்முகரைப் பிரார்த்தித்து இந்தச் சாபம் நீங்கப் பெற்று, அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவருடைய பக்கத்திலே நெல்லி விருகூடிவடிவமாய் நின்று சதா அவரைச் சேவித்து வந்தாள். குகமூர்த்தி சுவாமிமலைக்கு எழுந்தருளி வந்தபோது பூமிதேவி கூடவே வந்து அந்த கூேடித்திரத்தில் நெல்லி விருகூடிமாய்ச் சுவாமி சந்நிதிக்குத் தென்பால் நின்றுகொண்டு நித்தியம் குக மூர்த்தியைச் சேவித்து வருகின்றாள்" - என்பது திருவேரக

இனி நெல்லி விருகூம் - திரு ஆவினன்குடி - பழநியிலும் உள்ளது திரு ஆவினன்குடிக் கோயிலின் வட கிழக்கில் சரவணப் பொய்கை அமைந்துளது: காவடி எடுப்போர் இத் தலத்தினின்றுமே தம் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். இத்தல விருகூடிம் நெல்லி" யாகும். - பழநித்தல வரலாறு - பக்கம் 38, (தொடர்ச்சி - பக்கம் 19 பார்க்க)