உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 21 கவலை தரவல்ல அந்தக் குறைபாடுள்ளவர்களுடன் உள்ளதான (நான் செய்யும்) கலவியிலும் . கலவிப் பொழுதிலும், தெளிந்த பாடல் மாலைகளையும் . நறுமணமுள்ள மலர் மாலைகளையும் (ஐய) அழகுபெற (அணிவன செய்ய) அணிதல் செய்ய அணிய (உனது) (சிவந்த திருவடி யினைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக. தவநெறியை மேற்பூண்டு தியானித்து இருந்த சிவமுநிவர் துள்ளிச்சென்ற ஒப்பரிய புள்ளிமானுடன் கலவி பூண்டு - பெறப்பட்டவளான தினைப்புன வள்ளி, அந்த மலையில் இருந்த வேட்டுவக் குலத்து வள்ளி - (அல்லது பெறப் பட்டவளான வள்ளிமலையில் வாசஞ்செய்த வேட்டுவச்சி வள்ளி) கொடுத்த திணைமாவை மெதுவாக உண்டவனே! பயனற்ற மார்க்கத்தைச் (சொல்லுமவர்) சொல்லி வந்த சமணரின் (அவை) கூட்டத்தைக் (கழுவில்) மாய்த்த செல்வனே! அழகிய வெள்ளிகரம் என்னும் நகர்த்தில் வாழும் செல்வனே! பகைவர்களுடைய (சூராதிகளுடைய) செல்வம் பொருள் எல்லாம் (அன்று) (கடல்) நீரில்மூழ்கி அழியும்படி போர் செயவல்ல பெருமாளே! (கழலிணை பைய அருள்வாயே) 663. போர் செய வல்லனவும் கள்ளத்தனம் உள்ளனவுமான இரண்டு கயல்மீன் போன்ற கண்களானவை வள்ளைக்கொடி போன்ற காதுகளை (அல்லது காதில் உள்ள குழையணி. களைத்) தாக்கித் தள்ளி விளையாடுகின்ற புளகாங்கிதம் கொண்ட கொடிபோல நெகிழ்ந்துள இளம்பெண்கள் (புரியிள) புன்னகை புரியும்போது தெரியும் முல்லை யரும்புபோன்ற பற்களின்மீது பற்களைக் கண்டு.