உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடம்பாக்கம்) திருப்புகழ் உரை 125 மாடம்பாக்கம். 705. தோடு என்னும் ஆபரணமுள்ள காதினாலே, திரட்சி உள்ள வளையல்களை அணிந்துள்ள செவ்விய கைகளாலே, யாழ்போல இனிய இசை கொண்ட மெல்லிய குரலாலே, பரிசுத்தமான ஒளிவீசும் பற்களாலே (அகிற்) புகையூட்டிய மெல்லிய கூந்தலாலே, (ஊறிய தேன் இலங்கு இதழாலே) தேன் ஊறிய இலங்கு இதழாலே - தேன் ஊறின விளக்கம் உள்ள வாயிதழாலே, (ஆலம்) விஷம் போன்ற (விலோசனங்களினாலே) கண்களாலே, ஒளி வீசும் அழகாலே பாடகம் என்னும் அணி புனைந்த கால்களாலே, நிரம்ப வீசப்பட்ட குளிர்ந்த பன்னிராலே, வளர்ந்துள்ள பாரமான கொங்கைகளாலே, (ஆடவர்களை) வளைக்கின்ற பொ து மகளிருடைய. வஞ்சக நடிப்புச் செயல்களாலே நான் மோகத்தில் முழுகி நின்று தளர்ச்சியுறாமல் சிலம்பணிந்த உனது பாத தாமரை மீதே என்னை ஆட்கொண்டு சேர்க்கும் வகையை நீ நினைக்கமாட்டாயோ! (நாடுதற்கு) தேடிக் காண்பதற்கு அருமையான சோதிப் பொருள் சிவபிரானாக --- முருகவேளாக ஒதுகின்ற சிவாகமங்களில் பலவித பேதங்களாற் போற்றப்படும் (அநாதனே) - தனக்குமேலே தலைவன் இல்லாதவனே! மந்த்ர தந்த்ர சாஸ்திரங்களிற் கூறப்படும் சிறந்த ஞான வடிவினனாகி. (இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்) எனப்படும் நால்வகைப்பட்ட வேதங்களையும் ஒதித் b (வேதா) - பிரமனும் (அல்லது சராயுசம் ஃே பிறப்பன), அண்டசம் (முட்டையிற் பிறப்பன), உற்பீசம் (வித்திற் பிறப்பன), சுவேதசம் (வேர்வையிற் பிறப்பன), என நால்வகை உயிர்த் தோற்றங்களைப் படைக்கின்ற (வேதா) பிரமனும், வேதங்களும் நாடி நின்றதான, ஒப்பற்ற மாயைகளைக் கடந்து நிற்கும் மன ஒடுக்கத்தை (சாந்தியை)த் தரும் நாதனே! பன்னிரு திருப்புயங்களை உடையவனே!