பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/692

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகர்) திருப்புகழ் உரை 133 கோடை நகர். 707. முதல் முதலிலே என்னுடைய தாயின் உடலில் இருந்து, உடல் அழுக்குடன் இருந்து, (பின்பு) இந்தப் பூமியிலே. ஆசையுடனே பிறந்து-பிறக்கும்போதே ஆசையுடன் பிறந்து, (பெற்றோர்-சுற்றத்தார் இவர்தம்) அன்பால் வளர்ந்து, ஆள் அழகன் என்னும்படியாக விளங்கி விளையாடி பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து. பெண்களுடனே மருவிக் கலந்து, பூமியில் வேண்டியிருக்கிறதென்று பொருள்களைத் தேடி (போகங்கள்) சுகங்களிலேயே திரிதலுற்று, பாழான நரகத்தை நான் அடையாமல் உன்னுடைய மலரன்ன திருவடிகளைச் சேர அன்பு தந்தருளுக. சீதையைக் கொண்டுபோன அந்த (அல்லது மந்த அறிவு மழுங்கிய) ராவணனைக் கொன்று வென்ற தைரியசாலி, ஹரி, நாராயணனுடைய மருகனே! தேவர்கள், முநிவர்கள். மேக நிறங்கொண்ட திருமாலாம் ஹரி, பிரமா இவர்களெல்லாம் நின்று தேடியும் காணுதற்கு அரியவராய் நின்ற சிவனது குழந்தையே! (*கோதை) தேவி, (மலை) கயிலைமலையில் வாழ்கின்ற நாதர் சிவபிரானது இடது பாகத்தில் இடங் கொண்டிருக்கும் (கோமளி) அழகி, (அநாதி) தொடக்கம் இல்லாதவள் தந்த குமரேசனே!

  • கோதை பார்வதி - கொம்பியல் கோதைமுன் அஞ்ச கோதை துணையாதி முதல் வேத விகிர்தன்" -சம்பந்தர்-3-18-4; 68-6.

கோதைமலை என்ற ஒரு தலம் சேலம் ஜில்லாவில் இருக்கிறது என்பர்.