உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சமய ராமத சாதல சமய மாறிரு தேவத சமய நாயக மாமயில் முதுவீர. சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு சமர மாபுரி மேவிய பெருமாளே (4) உத்தரமேரூர். (செங்கற்பட்டு ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்மேற்கு 18 மைல்) 718. அறிய தனன தனண தனதான தனண தண்ன தனதான தனண தணன தனதான தனதான சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள் துகளி t லிருடி யெழுபேர்கள் சுடர்மூவர். சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் தொலைவி லுடுவி னுலகோர்கள் மறையோர்கள், அரிய Xசமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி Oஅரியு மயனு மொருகோடி யிவர்கூடி

  • சமயம் ஆறிரு உட்சமயம் வைரவம், வாமம், காளா முகம், மாவிரதம், பாசுபதம், சைவம் (பிங்கலம்)

சைவம், வைஷ்ணவம், சாத்தம், செளரம், காணாபத்தியம், கெளமாரம்....என வைதிக மதம் ஆறு. 1 முநிவர் எழுவர். அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் - (பிங்கலம்). அத்திரி, பிருகு, குச்சன், வசிட்டன், கெளதமன், காசிபன், அங்கிரசு எனவும், மரீசி, அத்திரி, அங்கிரசு, புலத்தியன், புலகன், கிரது. வசிட்டன் - எனவும். அத்திரி, ஆங்கிரசன், கெளதமன், ஜமதக்னி, பரத்துவாசன், வசிட்டன். விசுவாமித்திரன் - எனவும் கூறப்படும்.

  1. பகுதி புருடர் - பிரகிருதி புருஷர்.

X சமயகோடிகளெலாம்' - தாயுமானார். O "நூறுகோடி பிரமர்கள் நொங்கினார், ஆறுகோடி நாராயணர் அங்ங்னே" - அப்பர் 5-100-3.