பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை ஆன னங்கள் மூவி ரண்டு மாறி 'ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று நினைவேனோ, வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ருபி யம்பை t வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே. Xமாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ளுறைவோனே: xவேலை யன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச அனைவோனே. வீர மங்கை Oவாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கையாள வந்த பெருமாளே, (2)

  • வேதமந்த்ர ரூபி.அருமறைக்கு முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்வி' - எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே" அபிராமி அந்தாதி 10, 55

t வாணி - கா என்னும் வாணியையும், மா என்னும் இலக்குமியையும் அக்ஷத்தினின்றும் தோற்றுவித்தும், அக்ஷமாகக் கொண்டும் 'காமாகூதி" எனப் பெயர் போந்தது (அகூடிம்-கன்) தாமரைத் தவிசின் மாதும்.வாணியுந் தன் கண்ணென உடைய பச்சைக் கவின்பெறும் உமைமாது". வீரசிங்காதன புராணம் பாடல் 653-பக்கம் 540 கீழ்க்குறிப்பைப் பார்க்க t பஞ்சப்ாணி என்பது பார்வதிக் கொருபெயர் தேவிக்கு ஆயுதம் பஞ்சபுட்ப பாணம் ஆதலின் தாமங் கடம்பு, படை பஞ்ச பாணம் அபிராமி அந்தாதி - 73. x மாயை ஐந்து: தமம், மாயை, மோகம், அவித்தை அநிர்தம் (1) ஜீவ சைதன்னியத்தை மறைக்கையால் தமம். (2) ஜகரூபமான அந்நிதாத் தோற்றத்துக்குக் காரணமாகையால் மாயை, (3) விபரீத ஞானம் உண்டாக்குகையால் மோகம், (4) உணர்வு அழிக்கையால் அவித்தை (5) சத்து ரூபத்துக் கந்நியமாகையால் அநிர்தம் வேகம் ஐந்து: இது காற்றின் ஐந்து குணங்களை குறிக்கின்றது போலும். அவைத்ாம். போக்கு வரவு. நோய், கும்பித்தல், பரிசம் என்பன: வேகம் - விரைந்தகதி. வேகம் - சத்தியெனக் கொண்டு சிற்தித்தி, பராசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி இவைகளைக் குறிக்கின்றன எனக்கொள்ளலாம். உயிர்க்கு ஒளியாக நிற்பது சிற்சத்தி, பிராணன் முதலிய வாயுவாக நிற்பது பராசத்தி, பஞ்சபூதமாக நிற்பது இச்சா சக்தி, ஐம்பொறி யுணர்ச்சியாக நிற்பது ஞானச்த்தி, மற்றை வினைத்துணையாக நிற்பது கிரியா சத்தி இனி (தொடர்ச்சி பக்கம் 159 பார்க்க.)