உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 742. கலவி மயக்கு ஒழிய தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதான பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப் பவளநிறத் ததரம்விளைத் தமுதுாறல். பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப் படைமதனக் கலையடவிப் பொதுமாதர் சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைது.வளத் துகிலகலக் க்ருபைவிளைவித் துருகாமுன். சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற். சுழலுமனக் கவலை யொழித் தருள்வாயே *கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக் கணைதொடுமச் சுதன்மருகக் குமரேசா. கயிலைமலைக் கிழவனிடக் f குமரிவிருப் பொடுகருதக் கவிநிறையப் பெறும்வரிசைப் புலவோனே: திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச் செறியும்வயற் கதிரலையத் திரைமோதித். # திமிதிமெணப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித் திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே.(1)

  • கருகுநிறத்த சுரன்-ராவணன். "கறுத்த அரக்கன்" சம்பந்தர் 2-57 8.

1. குமரி விருப்பொடு கருதக் கவி நிறையப் பாடினது; "பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்ற பாலைப் பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டருள் தம்பிரானே" "நுகர் வித்தகமாகு மென்று உமை மொழியிற் பொழிபாலை உன்டிடு. பாலன்" - திருப்புகழ் 136, 110

  1. ஆற்றில் வெள்ளம் வருவதை ஊராருக்கு உணர்த்த திமிதிமென்று

பறை அறைவிப்பது அக்காலத்திய வழக்கம்