உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேட்களம்) திருப்புகழ் உரை 239 மகி ழ்ச்சிகொண்ட பேய்க்கூட்டங் b, பெரிய காளியும், கூளிகளும் (பெருங்கழுகுகளும்) ಸr®91ಿ பிணங்களின் மேலே விழுந்து, அப் பிணங்களின் மூளைகளைக் கடித்துத்தின்ற பூதங்களோடே, பாடி ஆடுதலைக் கண்ட வீரனே! குதித்து, குரங்குகள் மேலே உள்ள குலைகளைக் குலைத்து நீண்ட கமுக மரங்களினிடையே ஊடாடுவதால், குதித்து விளையாடுவதால்) அக் கமுகங்குலைகள் அறுபட்டு வாழைக்குலைகள் மேல் விழும்படியான அழகுநிறை செழுமையையும், பெண்கள் குளிக்கும் (அல்லது (பூக்) கொடிகளைக் கொண்டுள்ள) குளத்திலுாறி உள்ள (மலர்த்) தேன்களின் சாரத்தையும் மிகுந்த மகரந்தங்களையும் உண்டு உலாவுகின்ற மீன்கள் ஒடுதலையும் உடைய (மாணி கொள் குழிக்குள்) திருமாணிகுழி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (தம்பிரானே)! தேவர்களும் தொழுகின்ற தம்பிரானே! (பாழில் மயங்கலாமோ) திருவேட்களம். 751. நான்கிதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவொடு (மூலாதார கமலம் முதல்) கதிரொத்திட ஆக்கிய கோளகை முச்சுடர்களால் ஆன மண்டலங்கள் (அக்கினியாதி மும்மண்டலங்கள் வரையில்) - ஆறாதார நிலைகளெல்லாம் - குளிர்ந்து தழைய சிவப்பேற்றைத் தருவதான நாடக (அநுபூதி) பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி என்னுடைய ஆணவமலம் (யான் எனது எனும் அகங்காரம்) (அற்றிட) தொலைந்து போம் வண்ணம் அதை (வாட்டிய) கெடுத்து ஒழித்த உனது பன்னிரண்டு (சயிலக்குலம்) குலசயிலம் - சிறந்த மலைகள் போன்ற தோள்களையும் (முகமாறும்) ஆறுமுகங்களையும்,