உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 801.வேசையர் மயக்கு அற தனத்த தானன தனதன தனதன தனதத தானன தனதன தனதன தனதத தானன தனதன தனதன தனதான பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக நகைத்து வாமென அமளிய ருகுவிரல் பிடித்து போயவர் தொடையொடு தொடைபட வுறவாடிப். பிதற்றி யேயுள விடுபண மதுதம திடத்தி லேவரு மளவுந் லுரைகொடு பிலுக்கி யேவெகு சரசமொ டனைகுவர் கனமாலாய், முருக்கி னேரித ழமுதுப மென வுரைத்து லீலைக ள த மொடுமலை முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ്iു്. முறுக்கி யேயுதை கொடுவசை ”| மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ o o அருளதாராய; நெருக்கி யேவரு மவுணர்கள். குலமற வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி கொளும்வேலா. t நெகத்தி லேஅயன் முடியறி யிறை#திரி புரத்தி லே நகை புரிப்ர னடியவர் நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய புதல்வோனே. செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை மருக்கு லாவிய் மலரன்ன மிசைபுணர் ருக்கை வேல்வடி வழகிய குருபர முருகோனே.

  • பொருள் தீர்ந்தால் வேசையர் செய்யும் செயல் - 1147 ஆம் பாடலைப் பார்க்க வேசையர் பொருள் உள்ள வரையில்தான் நேசிப்பார் என்பது -

'விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின் வேறல்ல - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே யறுமே அவரன்பும் கையற்ற கண்ணே அறும்" - நாலடியார். t பிரமன் தலையை நகத்தால் கிள்ளியது - பாடல் 286 - பக்கம் 209 கீழ்க்குறிப்பு.

  1. திரிபுரம் எரித்தது - பாடல் 285 பக்கம் 200 கீழ்க்குறிப்பு.