பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 87 (மன்மதனது ஐந்து மலர்ப் பாணங்களில்) முதற்கணையாகிய தாமரை மலர், அருமையான அசோக மலர், (அம்பரம்) மாம்பூ ஈற்றிலும் இடையிலும் உள்ள நீலோற்பலமலர், முல்லைமலர் ஆகிய புஷ்ப பாணங்களின் தொழிலாற்றலால் - (கலக அமர் வாய் தோய்ந்து - சச்சரவு பொருந்தி (அல்லது - கலகப்போரில்) ஈடுபட்டுப், படுக்கையின்மேல் அயர்வு (சோர்வு) நீங்க, என்மீது தாக்கி எழுகின்ற காமதாகம் நீங்கும்படிக் கனத்ததும், ரவிக்கை தாங்கியதுமான இளநீர்போன்ற கொங்கைகளை அணைந்து - என்னுடைய உயிரை கரிய மை பூசிய செழிப்புள்ள கண்கொண்டு கவர்ந்த இந்தப் பெண்மீது மோகம் மிக்கு எழுகின்ற அதுபோகத்தை (இன்ப நுகர்ச்சியை). இனி விட்டொழிப்பதற்கு வேத முடிவான, பரமசுகம் தருவதான, முத்திப் பொருளாகிய, இதம் (இன்பம்) தருவதான (உனது) பாத தாமரையைத் தந்தருளுவாயாக. அ, ம, கர- அ(உ) ம - ஒம் என்னும் பிரணவாகாரமான வரும், திகம்பரரும், அது என்று அஃறிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஏகனாய் (ஒருவனாய்) மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பிலாத தன்மை உடையவரும், (அன்னம்) அன்னரூபங் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில் (முடி தேடி) அறியாத (பாபத்தை ஒழிப்பவரும்) LJITL/ ரகிதரும், (தேவியின்) அழகிய முலைக்காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவனை உமாதேவி (தவஞ்செய்து) சேரப் பெற்றதும், தேவி அருளிய (வளர்த்த) (முப்பத்திரண்டு) அறங்களும் நிகழப் பெற்றதுமான (தலமாம்) பூரீகாஞ்சியில் வீற்றிருப்பவனே!