பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/978

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவளுர்) திருப்புகழ் உரை 419 (தேசாதினா) தேச ஆதீனா e தேசமாகிய பொன்னுலத்துக்கு உரிமையாளனே! (ஆதீனார் உன்னை நம்பி இருந்த தேவர்களுக்கு (அல்லது தீனார் - ஏழைகளுக்கு) ஈசா - தலைவனே! சிறப்பு வாய்ந்த திருவாரூரில் (வீற்றிருக்கும்) பெருஞ் செல்வனே! சேயே! வேளே! பொலிவு உள்ளவனே (அல்லது தீப்பொறியாய்த் தோன்றினவனே) தலைவனே! தேவனே! தெய்வப் பெருமாளே! (தேவர்கள் பெருமாளே)! (வாணாள் வீணே போகத் தகுமோதான்) 821. கூரிய வாயை உடைய நாரையே! (இங்கே) வா! என்னை விட்டுப் பிரிந்துபோனவர் திரும்பி வந்து (என்னைக்) கூடாரோ - சேராரோ! கொஞ்சமல்ல என் ஆவி (உயிர்) (மிகவும்) குற்றம் அடைந்தது. (பயனற்றதாயிற்று); (என்) மாதா-தாயும் (மாறானாள்) என்னொடு மாறுபட்டுப் பகையானாள்; (கோளேகேள்) கேள் கேளிர் - சுற்றத்தார்கள் - கோள் மூட்டுதலிலேயே (என்மேல் அலர் தூற்றுதலிலேயே) ஈடுபட்டுள்ளார்கள்; மற்றும் இளவாடைக் காற்றானது. அறுக்கின்ற வாள்போல என் மேலே வீசி, ஏறா ஏறி, (ஏறிட்டது தீயின்) திப்போல - நெருப்புப்போல (ஏறிட்டது) மேலே படுகின்றது: ஈயாமல் ஒருவருக்கு ஒன்றும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேரைப் பாடி ஈடேறாது தவிப்பவர் போல (நானும்) கெடலாமோ! சூரன் வாழாதவண்ணம், (மாறாதே வாழ்சூழ்)-தங்களது (சுக) நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் (ஆய்ந்து தேடும்) தேவர்களுக்கு அருள் நிரம்பப் பாலித்த தோல்வியே அறியாத வேலனே! மேம்பட்டு விளங்கும் திருவாரூரில் வாழ்கின்ற ஜோதி (சிவன்), அவரது ஒரு பாகத்தில் உள்ள உமை இவர்கள் (ஊடே) மத்தியிலே