பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/996

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமநாதன்மடம்) திருப்புகழ் உரை 437 யமதுரதர்களை மோதி வெருட்டத் தக்கதுமான மெளன நிலையதாய்ப், பேச்சிலாததான (ஞான) உபதேசம் என்கின்ற வாளை எனது உட்பகை புறப்பகை யாவும் ஒழிந்துபோக நீயும் (தயைகூர்ந்து) அருள்புரிதல் வேண்டும்; தேவி ஒரு பாகமான அருணாசல மூர்த்தியின் பூஜையை (முறை) ஒழுங்கு தவறாமல் போற்றுகின்ற அறிவாளியும். சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவரும், அருமையான தவ ராஜ ராஜருமான உலகம் புகழும் சோமநாதன் மடத்தில் வீற்றிருக்கும் முருகனே! சண்டைசெய்த சூராதிகளின் சேனை முறிபட்டு அழியவும், வடக்கில் உள்ள மேருமலை பொடிபட்டு விழவும், (முகரம்) பேரொலி செய்யும் (அல்லது சங்குகளைக்கொண்ட (சலராசி) கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே! உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக்கருதி உன்னிடம் முறையிட்டாலும் அவர்களின் எண்ணத்துக்கு மாறாக அவர்கள் மீது கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே! (மோன ...உபதேசவாளை ... அருள்வாயே) (436 ஆம் பக்கத் தொடர்ச்சி) x "அண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமந் தவறாது பூஜை செய்து வந்தவரும், அமணர் குலத்தைக் கண்டித்தவரும், அரியத வராஜ ராஜராக விளங்கினவரும், பெரும் புகழ் பெற்றவருமான சோமநாதன்' என்பவர் புத்துரில் தமக்கு உரிய ஒரு மடத்தில் உள்ள முருகவேளை வழிபட்டு வந்தார். இந்தச் சோமநாத மடத்திலிருந்த முருகவேளையும் அருணகிரியார் பாடிச் சோமநாதரது பத்தியையும் தவப் பண்பையும் இப் பாடலிற் சிறப்பித்துள்ளார். புத்துரில் உள்ள சிவாலயத் திருமதிலிற் காணும் சாசனம் ஒன்று (கி.பி. 1370) சோமநாத ஜியர்க்கு இப் புத்துார்க் கோயிலும் மடமும் உரிமையாக உதவப்பட்டனவாகத் தெரிவிக்கின்றது. (சாசனத் தமிழ்க்கவி சரிதம்-பக்கம் 125.126). அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்" பக்கம் 132-133. 0 முருகன் கருணையைக் காட்டும் இந்த அருமை அடி மனப்பாடஞ் செய்யத் தக்கது.