பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/999

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கரையி றந்திடுங் கடலென மருவிய வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ கலவி யன்புடன் குறமகள் தழுவிய முருகோனே. கணமு றுந்த்ரியம் பகபுர மருவிய கவுரி தந்தகந் தறுமுக என இரு கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழுவல பருமாளே. (1) சிக்கல். (ரெயில்வே ஸ்டேஷன். நாகபட்டினத்துக்கு மேற்கு 3-மைல். ஸ்வாமி சந்நிதி கட்டுமலைமேலிருக்கின்றது. திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 830. அருள்பெற தன்ன தத்த தனத்த தானன தன்ன தத்த தனத்த தாணன தன்ன தத்த தனத்த தாணன தனதான கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர் வன்ம னத்தை யுருக்கு லீலையர் கண்வெ ருட்டி விழித்த பார்வையர் இதமாகக் கையி லுற்ற பொருட்கள் யாவையும் வையெ னக்கை விரிக்கும் வீனியர் கைகள் பற்றி யிழுத்து மார்முலை தணில்வீழப். பின்னி விட்ட சடைக்கு ளேமலர் தன்னை வைத்து முடிப்பை நீயவி ழென்னு மற்ப குணத்த ராசையி லுழலாமற். *பெய்யு முத்தமி Nற்ற யாபர என்ன முத்தர் துதிக்க வேமகிழ் பிஞ்ளு கர்க்குரை செப்பு நாயக அருள்தாராய் வன்னி யொத்த படைக்க லாதிய துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி மண்ணி லற்று விழச்செய் மாதவன் மருகோனே. † 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்' -கந்தரலங்-22. f சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314.கிழ்க்குறிப்பு.