பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 153 துணைவனே! பாற் கடலில் தோன்றிய மாது இலக்குமியின் (சேர்ப்ப்) தலைவனே துளசி மாலை ( ந்த) மார்பனே! கோபாலா காத்தருளுக என்று (எனவே துதிக்கையை உடைய மலை போன்ற கஜேந்திரன் என்னும் யானை கூச்சலிட்டு அழைக்க உவண மேல் - கருடன் மேலே, (கன கோடு) தங்க மயமான சங்கத்தை (ஊதா) ஊதி, (வானே போதாள்வான்) ஆகாய வழியாக வந்து (ஆள்வான்) (அந்த யானையை) ரட்சித்து ஆண்ட் திரும்ாலின் மருகனே! குலிசாயுதத்தை ஏந்திய (அரசன்) இந்திரனுடைய (உலகு) பொன்னுலகைக் காத் ன தலைவனே தேவனே! (செவ்) வேளே! தேவர்தம் பெருமாளே! (மோகூடிம் சதா ஆமாறே புரிவாயே) 1063. சூரியனாய், குளிர்ந்த சந்திரனாய், பரந்துள்ள பூமியாய், ஆகாயமாய், நீராப், நெருப்பாப், (காலாப்) காற்றாய், நக்ஷத்திரக் கூட்டமாப், (மற்றும்) பலவுமாப்ப், பல (கிழமையாய்) உரிமைப் பொருள்களாய் (அல்லது ஞாயிறு கிழ்மைகளாகி - காலங்களாய், H+6+7ஆம் மேல் நாள் ஆய்-27 சிறந்த நகூத்திரங்களாய் - ஏழுலகங்களாய் - ( யாப்) வேதமாய், வேதங் க்கு மேற்பட்ட ஒளிப் பொருளாய், வேதாவாய் - பிரமனாய், திருமாலாய், இவர்களுக்கு மேற்ப்ட்ட சிவமானதும் (மங்கலப் பொருள்ானதும்) அழிவு என்பதே லாததுமான பரம்பொருளின் - (திருவடியை) - அஞ்ஞான இருள் என்பதே புக முடியாத - அந்தத் ருவடியைச் - குடியும் (முடிமேற் கொண்டும்), நாடி - தேடி விரும்பியும் (அல்ல்து சூடாமலும் நாடாமலும்) ஈடேறாமல் (வினே) }} திருதராட்டிரன் பெற்ற துரியோதனாதி நூறு பேரும் (சேண் நாடு ஆள்வான்) வீர சுவர்க்க நாட்டை ஆளும்படி நாள் ஓர் மூவாறினில் - பதினெட்டு நாள்களில் - போர்க்களத்தில் வீழ மாண்டு ஒழியவும் (திலக) சிறப்புற்ற அருச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளும் சீருடன் வாழுமாறு அவனுடைய தேரில் சாரதியாயிருந்து தேரைச் செலுத்தின பெருமான் திருமாலின் மருகனே! (அவுணர்களின்) ரத்தத்தில் தோய்ந்த வேலாயுத கரனே! அரக்கர்களாம் ராக்ஷதர்களின் மீது கோபம் கொண்டவனே! கடப்ப மாலை அணிந்தவனே கூதளப்பூ மாலை அணிந்தவனே! அழகிய மயில் வீரனே!