பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1075. வழிபட தனந்த தானந் தந்தன தனதன தனதான *இருந்த விடுங் கொஞ்சிய சிறுவரு முருகேளும். இசைந்த ஆரும் பெண்டிரு மிளமையும் வளமேவும்: விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே. t விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே # குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே. x குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் IDELETELIЛТЕПТЛТ; oதிருந்த வேதந் தண்டமிழ் தெளிதரு புலவோனே. சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே (81) இஃது ஒரு அருமை வாய்ந்த பாடல். ஒரு முருகபக்தன் தனிவழியிற் போய்க்கொண்டிருந்தபோது ஒரு உருவம் தன்னைத் தொடர்ந்து வரக்கண்டு பயந்து செல்லத் தொடர்ந்து வந்த அந்த உருவம் அவன் ஓரிடத்தில் வரும்போது தொடராது நிற்கவும். அந்த இடத்தைத் தாண்டின உடன் அவ்வுருவம் தன்னைப் பின் தொடருவதையும் கண்டு அவன் சுற்றி வந்து அந்த உருவம் தொடராத இடத்தில் இருந்த மணலை வாரி மடியிற் கட்டிக் கொண்டு செல்ல, அந்த உருவம் பின் தொடராது நின்று விட்டது என்றும் வீடுபோய்ச் சேர்ந்து எடுத்து வந்த அந்த மணலை ஆய்ந்து பார்க்க அதில் ஒரு ஒலை ஏடு இருக்க, அதில் இந்தப் பாடல் இருக்கக் கண்டு. இப் பாடலை அவன் எப்போதும் சிந்தை செய்து பாராயணம் செய்து வந்தான் என்றும் தாம் கேள்விப் பட்டதாக என் தந்தையார் கூறக் கேட்டிருக்கின்றேன். t தீபம் கொண்டு வழிபடுதலின் சிறப்பை விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந் நெறி. ஆகும்" - என்றார் அப்பர். 4-77.3 H: கண்ண பிரான் குருந்தில் ஏறுவது கண்ண பிரான் யமுனையில் நீராடும் மங்கையர்களின் துகிலை எடுத்துக் கொண்டு அதன் கரையிலுள்ள குருந்த மரத்தின் மேலே ஏ றுகின்ற வழக்கம் கொணடிருந்தார். ஒரு முறை கம்ஸனால் ஏவப்பட்ட ஒரு அசுரன் கண்ணனை நலிவதற்காக அந்தக் குருந்த மரத்தில் ஆவேசித்திருந்தான். அதை அறிந்த கண்ண பிரான் அந்த மரத்தை முறித்து அசுரனை மாய்த்தனர் என்பது வரலாறு - குருந்த மொன் றொசித்தான்" - பெரியாழ்வார். 4-7 குருந்தொசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந்தனை" - சம்பந்தர் 2-30-3. (தொடர்ச்சி. பக்கம் 175)