உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 209 ஆகாயத்தில் உள்ள மேகங்களை வாகனமாகக் கொண்ட (கடவுள்) இந்திரனுடைய (உடலம் என) தேகம் என்று சொல்லும்படி - உடல் முழுமையும் - (முதிய விழி கதுவி) முற்றின கண்களைக் கொண்டதாய், அழகு நிரம்பி மேலே படர்ந்துள்ள கோலத்தைக் கொண்ட தோகையை உடைய (மயில் ககம்) மயில் பட்சியை நடத்தி, அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நாற் படைகளுடனும் போர் செய்த பெருமாளே! (ஒரு பொருளை அருள்வாயே) 1096. குடல், மலம், ஜலம் நெருங்கியதாய், இடையிடையே (தடியும்) மாமிசமும் உடையதாய், அளவு (கொழுவும்), அளவுக்கு ஏற்ற கொழுப்பும், (உதிரமும் ரத்தமும், வெளிறு அளறுமாக நிறம் கெட்டு வெளுத்து-குழைசேறு குழம்புபோலாக கொள கொள என ஆகி, கணக்கற்ற புழுக்கள் நெளு நெளு என்று நெளிய உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பரவ வழியின் மத்தியிலே வரும்போதே துர் நாற்றம் வீசும் t 1095 பாடல் முதல் 1099 பாடல் முடிய ஐந்து பாடல்கள் மயில் பாடல்கள். மயிலின் ஆற்றல், அழகு, வண்ணம் - இவை அருமையான வகைகளில் ஒதப்பட்டுள். 1095ஆம் பாடலில் மயிலின் பலவிதநிறம், நொச்சியிலை போன்ற அடி யமுனை நதிபோன்ற நீல நிறம், இந்திரனைப் போல ஆயிரங்கண்கள் கொண்ட பீலி - கூறப்பட்டுள. 1996ஆம் பாடலில் திருமாலுக்கு எவ்வகையில் மயில் ஒக்கும் என்பது கூறப்பட்டுளது: அவருடைய சக்கரம் - சங்கு இவைகளின் ஆற்றல் போல ஆற்றல், அவரது உலகளந்த விசுவரூபம் போன்ற நெடிய உருவம் மயிலுக்கு உண்டு என்பது புலப்படுத்தப்பட்டுளது. 1097 ஆம் பாடலில் யுகாந்த காலத்து ஊழித்தியின் புகைக்கு மயிலின் ஒட்டமும் ஆற்றலும் ஒப்பிடப்பட்டுள. 1998ஆம் பாடலில் மயிலின் வேகம் கணபதியாம் களிற்றையும் பிளிறும்படிச் செய்ததென்பர் 1099ஆம் பாடலில் நடராஜப் பெருமானும் மகிழும்படி நடனம் செய்ய வல்லது மயில் எனப் புகழப்பட்டுள்ளது. # குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரு நரம்பொடு தோலும் இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங் கோதை யாள்" - நாலடி -5-6, - திருப்புகழ் 1060-ம் பார்க்க