பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 15 பாம்பணைமேல் துயிலும் திருமாலுக்கும், அயன் எனப்பட்ட பிரமனுக்கும் எட்டுதற்கு அரியவரான சிவபெருமானுக் 「Xり ஞானோபதேசம் செய்த காாணத்தால் குருமூர்த்தியாய் விளங்கின நாதனே (தலைவனே) (நாட்டம் உறா) நாட்டம் வைத்து (தமது விருப்பத்தை கருத்தை வைத்து) பல பொழுதும் (எப்பொழுதும்) ஆசை கொண்டவராய் (உன்னைப்) புகலும் உன் நாமங்களைச் சொல்லிப் போற்றும் நாவலோர்க்கு புலவர்க்குத் திருவருள் பாலித்து (உனது) திருவடியை அருள்கின்ற செல்வனே! _வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயில் மீது ஏறி, வேலாயுதத்தால் வீரம் பொருந்திய மாமரமாய் நின்ற சூரனைக் (குலைத்து) - அழித்துக் குலவரை - சிறப்புற்றிருந்த கிரெளஞ்சகிரி சாய்ந்தழியவும், விண்ணுலகத்துத் தேவர்கள் (பொற்) பூமாரி பொழிந்து வேலாயுதமூர்த்தியே போற்றி எனக் கூறித் தொழிவும், கடல் கலங்கி ஒலி செய்யவும் (வேலைச்) செலுத்தின (அல்லது பூங்கழல் காட்டின) பெருமாளே! (பரமார்த்தம தருள்வாயே) 1000. தோடும், மெல்லிய குழையும் அணிந்துள்ள காதினிடத்தே போர் செய்யும் ஒளி பொருந்திய, நீண்ட கயல்மீன் போல விளங்கி, அரிய உயிரையும் கொள்ளை கொள்ளும் வேல்போலப் பாய்வதான கண்களை உடைய மான்போன்ற மாதர்களின் (வேசையர்களின்) வஞ்சம் நிறைந்த உள்ளத்தினிடத்தே மோகம் கொண்டவனாய், அவர்கள் பேசுகின்ற (அன்று) விரோதச் சொற்களின் உண்மை நிலையை) அறியாமல், தலைவிதி சூழ்ந்து தருகின்ற கொடிய துன்பத்தாலேயே (என்) உயிரானது சுழன்று சஞ்சலம் உறாமல் ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பாகிய உணவை (ஊறு கண்டிட) துன்பம் செய்ய அதன் மேற் பாய்ந்து விழுகின்ற மயில் (வாகனத்தில்) நிறைந்து விளங்கும் வளப்பம் - வாய்ந்த குமரேசனே! பன்னிருபுயம் கொண்ட செவ்வேளே! யாரும் உன்னை வணங்கி நின்று உனது அருளால் உன் திருவடியைத் தொழ அவர்களுக்கு (ஆண்மை) மனோதிட வெற்றி யைத் தந்தருளும் செல்வனே! (தேவர்களுக்குச் சூரனால் உற்ற) தாழ்வுஇழிவான நிலை ஒழிவதற்கு வேண்டி ஆதிமூர்த்தியாகிய சிவ. பெருமான் தந்தருளிய பெருமானே! நாயேன் - அடியேன் நல்வாழ்வு பெற அருள்புரிவாயாக