பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அஞ்சொடுங் கும் பொதும் பொன்றையென் றுஞ்சுமந் தங்குமிங் குந்திரிந் -- திரைதேடுஞ் சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் சஞ்சலன் கிஞ்சுகந் தருவாயார். தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்று நின் தண்டையம் பங்கயம் புகழ்வேனோ, கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங் கங்களுங் திங்களுங் கழுநீருங். கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங் கந்தமுந் துன்றுசெஞ் சடையாளர்: பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும் fபந்தவெங் +குண்டர் தங் xகுலகாலா. oபண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும் பண்பு நண் பும்பெறும் பெருமாளே (109)

  • பொதும்பு - குகை குழி

" மேருவின் பொதும்பிற் புக்கதோர் மின்னொளி மேகம்" - கம்பரா மீட்சி. 325 "புண்டரீகப் பொதும்பு" - அப்பர். 5-76-2 கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து" - பெரியாழ்வார். 5.2.7 X பந்தன்-சம்பந்த மூர்த்தி-பெருமானைப் பந்தனுரை செந்தமிழ்கள்சம்பந்தர் 2-29-11. சம்பந்தர் தேவாரம் 384 பதிகங்களுள் 18 பதிகங்களில் தம் பெயரைப் பந்தன்'எனவே குறுக்கிக் கூறியுள்ளார் சம்பந்தப் பெருமான். அப்பதிகங்களின் எண் 9, 18, 96, 119, 165, 169, 170, 188, 216, 219, 222, 223, 224, 271, 298, 326, 334, 372, (தேவார ஒளிநெறி - தொகுதி 2-பக்கம் 561).

  1. குண்டர் - சமணரைக் குண்டர் எனவே தேவாரத்திற் கூறப்பட் டுள்ளது.

"அமன் குண்டர்" - சம்பந்தர் 1-28-10; 1-39-10, குண்ட மிண்ட எத்தர் திருவிசைப்பா - 4.8; "பாயுடுத் துழல் குண்டர் கந்த புராணம் - (கடவுள் வாழ்த்து -20). X" அமண் சேனை உபாதி கழு மலங்கற்கு உரைத்தோன்" -கந்தரந்தாதி - 29 - தொடர்ச்சி பக்கம் 225