உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 275 1125. (பொற்பூவை, சீரை, போலப் போதப் பேசிப் பொற்கனி வாயின்) பொற்கனிவாயின் - அழகிய கொவ்வைக்கனி போன்ற வாயினால், (பொற்பூவை) அழகிய நாகணவாய்ப்புள்ளின் (சீரைப் போல - சீரான - நேர்த்தியான குரல் போன்ற அழகிய குரல் (போதப்பேசி-பொருந்தும்படிச் செவ்வையாகப் பேசி (பொய்க் காமத்தே) பொய்யான நிலையற்ற சிற்றின்பத்தின் பொருட்டு, (மெய்க்கு ஆட்) தங்கள் உடலுக்குப் பொருந்தின தக்கதான (அப் பூணைப்பூண்) அந்த ஆபரணங்களை அணிந்துள்ள (வெற்பில்) மலைபோன்ற கொங்கைமிது (துகில் சாய) ஆடையானது சாய்ந்து நெகிழ (கற்பால்) - கட்டளையிட்டு (ஆணையிட்டுப்) பேசும் பேச்சால் (எக்கா) எக்கி - தாக்கி, (உட்கோலி) மனத்தினுள்ளே எண்ணங்களை வைத்துக் கொண்டு - (காசுக்கே) பொருள் வேண்டியே (கைக்குத்து இடும்) கை கலந்து குத்துச் சண்டை செய்யும் (மாதர்) பெண்களின் (கட்கே) கண்களுக்குப் (பட்டே) வசப்பட்டே (நெட்டாசைப் பாடு) - பேராசைத் தொழில்களில் (உற்றே) ஈடுபட்டுக் கஷ்டப் படுவேனோ! (சொற்கோலத்தே) சொல் அலங்காரத்துடனே - ( அழகிய சொற்களைக் கொண்டு) (அழகிய சொற்கள் அமைந்த பாடல்களால்) உனது சிறப்புற்ற திருவடிகளைத் தொழுபவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே! (தொக்கே) தனது உடலே (கொக்காகி) மாமரமாகிச் (சூழ்) சூழ்ச்சி செய்த (அச்சூர்) அந்தச் சூரன், விக்கா முக்க திண்டாட்டத்தால் (விக்கவும் முக்கவும்) மிக வேதனைப்படச் செலுத்தின வேலாயுதனே!