பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1132. அனுக்கிரகத்தைமறவேன் தானான தான தத்த தத்த தத்தன தானான தான ததத ததத தததன தானான தான ததத ததத தததன தனதான *ஆனாத ஞான புத்தி யைக்கொடுத்ததும் ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ரழியாதே. ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி துலகேழும்: யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் தேனுாற வோதி யெத்தி சைப்பு றத்தினும் tஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் இடராழி. ஏறாத மாம லத்ர யக்கு னத்ரய நானாவி கார புற்பு தப்பி றப்பற ஏதேம மாயெ னக்க துக்ர கித்ததும் மறவேனே #மாநாக நானவ லுப்பு றத்து வக்கியொர் மாமேரு யூத ரத்த னுப்பி டித்தொரு மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி xலொருமூவர்.

  • இது அருணகிரியாரின் வரலாற்றையும் நன்றி மறவாக் குணத்தை யும் வெளிப்படுத்துகின்றது. தாம் ஞானம் பெற்றது. (தேவாரம்போன்ற) ஞான நூல்களை ஆராயும் கருத்தைப் பெற்றது. ஆசைகளை வென்று இந்த மாயை வாழ்க்கையில் மருளாது பெரிய ஞான நிலையையும் மிகக் கீர்த்தியையும் அத்து வித ஞானத்தையும் பெற்றது. தேன்போன்ற திருப்புகழைப் பாடி எங்கும் தமது வார்த்தை மதிக்கப் பெற்றது. மும்மலம் முக்குணம் இவைகளுக்கு ஈடான பிறப்பு அறும்படிப்பெற்றது. ஆகிய அருட் ப்ரசாதங்களை மறவேன் என்கின்றார்.

t தமது காலத்திலேயே மிகக்கீர்த்தி பெற்றிருந்தனர் அருணகிரியார் - பாடல் 343-பக்கம் 358 கீழ்க்குறிப்பு.

  1. திரிபுரத்தை எரித்த வரலாறு - பாடல் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு

- பாடல் 577, 984-ம் பார்க்க திருமால் அம்பாக அமைந்தது சீவக சிந்தாமணியிலும் கூறப்பட்டுள்ளது. போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணை" (362) x ஒரு மூவர் உய்ந்தது - பாடல் 469-பக்கம் 62 குறிப்பு.