பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல. அதற்கு ளாகையா லவையடக்க வுரையீதே, ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர ஈசன்மேல் வெயிலெ றிக்க மதிவேணி. ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில் ஏறியே யினிதி ருக்க வருவோனே; வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து வேதனா ரையும் விடுத்து முடிசூடி வீரது ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த வீறுசேர் சிலை யெடுத்த பெருமாளே (164) 1158. கழல் சேர தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த தனதான சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை சந்திரந் ததும்ப சைந்து தெருஆடே சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு

  • சந்தனந் துவண்ட சைந்து வருமாபோல்,

கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள் கொஞ்சியொன் தொடர்ந்தி டும்பொன் மடவார்தோள்.

  • சந்து அ(ன்)ணம் - துதுக்கு உரிய பறவைகளுள் அன்னமும் ஒன்று. இதுவே நளனுக்கும் தமயந்திக்கும் இடைய தூது சென்றது தூதுக்கு உரிய பறவைகள்: நாரை, வண்டு, அன்னம், கிளி, அன்றில், குயில், புறா

எகினமயில் கிள்ளை எழிலியொடு பூவை சகி குயில் நெஞ் சந்தென்றல் வண்டு - தொகைபத்தை வேறு வேறாய்ப் பிரித்து வித்தரித்து மாலை கொண்டன் பூறிவா என்றல் தூது" - பிரபந்தத்திரட்டு - இலக்கண விளக்கம் - சூ 874, உரை