பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 33 குறவர்கள் பயிரிட்ட தினைவனத்திலே பரண்மீது, (அரையொடு) இடையொடு (மலையும்) போர்செய்யும் - (இடை ஒடியும் படி கனத்திருக்கும்) கொங்கை - பசலை நிறம் கொண்டெழுந்த கொங்கை (அழகு தேமல் அல்லது - பொன்னிறம் - கொண்ட கொங்கை விளங்கும் குறமகளை (வள்ளியை) அழகு பெறத் தழுவின பெருமாளே ! (ஒரு பொருள் அருள்வாயே) 1007. சதை, ரத்தம், மாமிசம், நெருங்கியுள்ள செயல் நிறைந்துள்ள புழுக்கள் இருந்து பழகும் அறிவில் பொருளாம் உடல், ஈற்றில் சுடுகாட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு - இதைப் போற்றி வளர்க்கும். சகல (கருமிகள்) சாத்திரப்படி சகல கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற சமயவாதிகள், சரியை, கிரியை, தவம் எனச் சொல்லும் சிலர், மனக் குழப்பம் உள்ள அறிவினர், ஆகிய இன்னோர் கொண்டுள்ள மார்க்கத்தை நான் விட்டொழிக்க, இனி அடியேனுக்குப் பொருந்தும்படி, இதுதான் (ஞானப்) பொருள் என்று என் புத்தியிற் படும்படி, ஒப்பற்ற ஒரு உபதேசத்தை நான் பெற நல்வினை தீவினை எனப்படும் இருவினைகளும் நீங்க (ஆணவம், கன்மம், மாயை எனப்படும்) மும்மலங்களும் நீங்க, இரவு பகல் ஆன்மாவின் கேவல சகல நிலைகள் ஒழிய, என்னுடையது என்னும் மமதை மமகாரம் நீங்க உன்னுடையது என்னும் துவித (நோக்கம்) பாவம் நீங்க. (அநுபூதி) அனுபவஞான உண்மையை