பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/461

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 453 (திருவநகர்) செல்வம் நிறைந்த பொன்னுலகப் பட்டணத்திற் குடி புகும் படியும், (சீகரம்) அலைகளும் மகர மீனும் கொண்ட (சலம்) கடல் వ్రై ஒலிடும்படியும், சூரனுடன் (உச்சிகளை உடைய) எழுகிரி பொடிபட்டழியவும், சாடிய (வேல் கொண்டு) மோதித் தாக்கின. பெருமாளே! (மயல் தவிர்த் தாள்வதும் ஒரு நாளே) 1185. மன்மதன் செலுத்தின பானங்களிற் பட்டும், இருவினையிற் பட்டும், (புவி) மண், (கடல்) நீர், (முதலிய ஐம்பூதங்கள்), சாரம் கிரகங்களின் இயக்கம் இவைகளுக்கு ஈடுபட்ட் வடிவமான இந்த உடலுடன் (உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மனத்தின் கண் உள்ள மாயை உணர்ச்சியும், நல்வினை, தீவினை எனப்படும் முற்றின வினைகளும் (அற) ஒழிய பழமையாய் வரும் ஆணவ மலம் வேரற்றுப் போக மகிழத்தக்க ஞான (அகத்து) உள்ளத்து விளங்கும் அனுபவஞானமாகிய அருளை அடைந்து உன் திருவடியை அடைந்த உன்னுடைய அடியார்களுடன் நானும் கூடி விளையாட (நீ) அடியேன் முன்பாக (பரிபூரணமான நிறைந்த கிருபைக்கு இடம் வைத்து, ஞானம் என்னும் (பரிமேல்) குதிரையின் மேல் அழகுடனே ஏறி, விண்ணவர் தேவர்கள் பூ மழையை உனது திருவடியின் மேற் பொழிய, பலகோடி வெண்ணிலவின் ஒளி வீச எழுந்தருளுக (சத கோடி) நூற்றுக் கோடி வெண்ணிற, அல்லது வெண்ணிற ஆடை அணிந்த மாதர்கள் கடலென - திரைவீசுவது போல (சாமரை அசையா) சாமரங்களை வீச பூரண சந்திரன், ( பன்னிரு சூரியர் தீப ஒளியாய் விளங்க (அல்லது) சந்திர சூரியர்களின் பேரொளி என்று சொல்லும்படி ஒளிவாய்ந்த ஒரு கோடிக்கணக்கான - "அந்தர அகடுதொட் டணவு நீள்புகழ் வெந்தெரி பசும்பொனின் விழையும் வெல்லொளி மந்திர வாய்மொழி மறுவில் மாதவர்". சிந்தாமணி 1239 .." மாசற இமைக்கும் உருவினர்" முநிவர், திருமுரு" சடை ஒளி பொற்புரிபோல் ஒளிர்தர நீண்ட செங்குஞ்சிச் சடைகொளு முடியர் தத்துவ ஞானத் தன்மையர்" - சிவ ரகசியம் நைமிசா 6