பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/510

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல் பிடித்து குற்றமா ரொருஆரன். பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர் பிழைக்க விட்டவோர் பெருமாளே (216) 1207. குணம்பெற தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் தனதான அரும்பி னாற்றணிக் கரும்பி னாற்றொடுத் தடர்ந்து மேற்றெறித் தமராடும். அந்ங்க ணார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத் தரம்பை மார்க்கடைக் கலமாகிக் குரும்பை போற்பனைத் தரும்பு றாக்கொதித் தெழுந்து கூற்றெனக் கொலைசூழுங். குயங்கள் வேட்டறத் தியங்கு துார்த்தனைக்

  • குணங்க ளாக்கிநற் கழல்சேராய்: பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக்

குரங்கி னாற்படைத் தொருதேரிற். புகுந்து நூற்றுவர்க் கொழிந்து + பார்த்தனுக் கிரங்கி யாற்புறத் தலைமேவிப்;

  • குணங்கள் ஆக்கி.

காமுக துர்த்தனாகிய தன்னைக் குணங்களாக்க வேண்டும் என இப்பாடலில் அருணகிரியார் வேண்டுகின்றார். இவ்வேண்டுகேளுக்கு இணங்கிப் பெண்முகம் நோக்கி மகிழ்ந்திருந்த அவரைச் சண்முக நோக்கி மகிழுமாறு முருகவேள் அருள் பாலித்தனர் என்பதைப் பாடல் 1189 அடி : விளக்குகின்றது. இத்தகைய அருட்பேறு தணிகைப் புராணம் பாடிய கச்சியப்ப முநிவருக்கும் கிடைத்தது என்பது: தொழும்பினரை யுடையவர்கள் ஆள்வதுறு கடனென்றும் தொல்லை மாற்றம், செழும்பவள இதழ் மடவார் திறத்தழுந்தும் எனதுளத்தைத் திருப்பித் தன் சீர்க், கொழும் புகழின் இனிதழுத்திப் புதுக்கியருள் தணிகைவரைக் குமரன் பாதம் தழும்புபடப் பலகாலும்