உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 509 1210. ஆசாரக் குறைவு உடையவன், அறிவில்லாதவன், (கோபாபராதி) கோபம் காரணமாய் (அபராதம் பல) குற்றம் பலசெய்பவன், (அவகுணன்) கெட்ட குணத்தை உடையவன் (துர்க்குணன்), யாருக்கும் ஆகாத (நீசன்) இழிந்த தன்மையுடையவன் - அநுசிதன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன், (விபரீதன்) மாறுபாடான புத்தியை உடையவன் (ஆசா விசாரம்) (மண், பெண், பொன் என்னும்) - ய எண்ணத்தைச் செலுத்துபவனாய் (வெகுவித) பலவிதமான மோகா - ஆசைச் (சரீத) சரித சரித்திரங்களை வரலாற்றை உடைய (அல்லது மோக ஆசரித ஆசைச் செயல்களைக் கைக் கொண்ட) (பரவசன்) தன்வசம் இழந்தவன்; விண், நீர், மண், தீ, காற்று எனப்படும் பஞ்ச பூதக் கலப்பால் உருவம் மாறி மாறி - (வெவ்வேறு உடம்பெடுத்து) (மாசான) குற்றங்களுடன் கலந்த (நாலெண் வகை தனை) (குணப் பண்பு, தொழிற் பண்பு ஆகிய முப்பத்திரண்டு குணங்களைக் கொண்ட (இந்த உருவங்களை) நீ என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத ஞான உள்ளம் வாய்க்கப்பெறாத பாவி . இவன் என்று (என்னை) நினைத்து (நீ) ஒதுக்கிவிடாமல் - (மாதா பிதாவின்) தாய் தந்தையரின் (அருள் நலம்) அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் (மாறா) நீங்குதல் இல்லாத (மகாரில்) குழந்தைகளைப் போல (தாய் தந்தையரின் அன்பும் அருட் செயல்களும் நீங்காத குழந்தைகள் போல) எனை (உன் குழந்தையாகிய என்மீது) இனிமேலாயினும் அம்மையப்பனாகிய நீ (அருள் பாலித்து) (மாஞான போதம்) சிறந்த ஞானோபதேசத்தை உபதேசித்தருள் செய்வதற்கு (நினைவாயே) திருவுள்ளத்தில் நினைத்தருளுவாயாக விசால - விசால - பரந்த (அல்லது வீசு - ஆலம் - வீசும் திரைகளுடைய அல்லது நஞ்சைக் கக்கின) கடல் வற்றிப் போகவும், பெரிய சூராதிகளின் மார்பு தொளைபடவும் வேதாளகணங்களின் பசி தணியவும் (அறை கூறி) போருக்கு வாருங்கள் என அசுரர்களைக் கூவி அழைத்து,

  • வேதாளங்களின் பசி - சூரசம்மாரத்தில் தீர்ந்ததை குரொடும் பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநாள் ஈருடம்பு மிசைந்து இரண்டு உதிரப்பரப்பும் இறைத்தனம்" - தக்கயாக 231