பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/635

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 627 அலைவீசும் கடலிலே (சேது கண்டு) அணை உண்டுபண்ணிச், சண்டைக்கு வந்த ராவனேசனை ஜெயித்த திருமால், முரன் என்னும் அசுரனைப் பகைத்துக் கொன்றவன் - ஆகிய விஷ்ணு மூர்த்தியின் தங்கை பார்வதி அருளிய குழந்தையே! முனிவர்கள், தேவர்களாம் விண்ணுலகத்தவர் சிறையிற் படும்படி வளைத்துச் சிறையிட்ட பெரிய சூரர்களின் சேனைகள் அவர்களுடைய சுற்றத்தாருடன் (தத்தம்) முடி - தலைகள், கோடி துாள் எழுந்து - கோடிக் கணக்கான பொடியாய் எழுந்து பறக்க, (அவர்கள் பிணத்தை) கழுகும் (பாறு) பருந்தும் (அருந்த உண்ணும்படி (முனை வேலினால்) போர் வேலினால் அல்லது வேல் முனையால் அழித்த பெருமாளே! (ஞான வீடு தந்து அருள்வாயே) 1271. பெண்களின் காம மயக்கத்திலே ஈடுபட்டுக் காமத்தால் ஏற்பட்ட பனி போன்ற ஒரு துளி உட்சென்று, மாட இயலென உளுந்து போலச் சுழற்சியுற்றுக் கருப்பத்திலே ஊறி மாறி - உருவம் மாறுதல் உற்று - வளர்ந்து, பல எனச் சுமந்து பலாப் ப்ழம்ப்ோல ஆண்தைச் சுமந்து, தேனு குடம் என பசுவின் பனிக்குடம் போலப் ப்ருத்து, மாதம் இது பேறு காலம் - பிரசவ காலம் இது (பெற வேண்டிய மாதம்) இது என வந்தது என்று கூற, வயிறு தளர்ந்து குழந்தையாக வெளிப்பட்டு வேத புவிதனில் - வேதத்திற் சொல்லப்பட்ட இந்த பூமியில் விழுந்து பிறந்து) ஏனம் எனஎன பாவம்பாவம் என்று சொல்லும் படி தவழ்ந்து அல்லது பாத்திரம் (அல்லது பன்றிக்குட்டி) உருளுவதுபோலத் - தவழ்ந்து, ஒளிவீசும் மணிகளை (உடை முதலியவற்றை அணிந்துகொண்டு, நடைகள் மிகவும் ஏற்பட்டு வளர்ந்து பலவித நடைகள் ஏற்பட்டு வேண விதம் எனத் திரிந்து - மனம்போன போக்கின்படிப் பல வகையாகத் திரிந்து, நறுமணம் வீசும் (புழுகு) வாசனைப் பண்ட வகைகள்ை உடலிற் பூசி (வேசிகளின்) விலை மாதர்களின் வலையிலே பட்டு இறந்து படுவேனோ! ஆதிசரன் - ஆதி மூலமே சரணம் என என்று, கயம் கஜேந்திரனாம் யான்ை குல்ாவ கொண்டாடிக் கூப்பிட (அதைப் பற்றி நின்ற) முதலையைக் (கிடங்கில்) - மடுவில் ஆர - நன்றாக உடல் தனை - அந்த முதலையின் உடலைப் பிளந்த ( அரிநேமி) நேமி அரி - சக்கரத்தை ஏந்திய அரி (திருமால்).