பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 643 முழுதும் (எல்லாம்) அழகுமயமாயு ள்ள குமர மூர்த்தியே கிரி - இமயமலையிள் (குமரி) மகள் பார்வதி மாட்டு (உருகும்) மனம் நெகிழ்ந்த முக்கண் கொண்ட சிவபிரான் பெற்ற, நற்குணம் - நற்செய்கை உள்ள புத்திரனே தேவர்களின் தம்பிரானே! (பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ) 1278. வீணையில் இசையை வளைத்து - பிறப்பித்து (விஷத்தை (மிடறு) தொண்டையிற் செலுத்தும்) ஆலம் - விஷம் (இடறு ஊட்டு) தாக்குதலைச் செய்யும் வீரத்தையும், கூர்மையையும் கொண்ட ஈட்டிபோன்ற கண்களைக் கொண்ட மாதர்களின், சொற்பொருளாவான் என்ற நமக்கே உபதேசிக்க வல்ல குருமூர்த்தியாய் விளங்குகின்றானே. இவன து சொற்பொருளின் அழகே அழகென்று தந்தை சிவபிரான் முருகனது சொற்பொருளின் அழகை வியந்து காண்பார்: இந்த அழகிய திருக்கரத்தால் தானே நம்மை முருகன் குட்டினான். என்னே இவனது கைகளின் அழகு என்று படைப்புத் திறம் கொண்ட கை அழகு உள்ள பிரமன் அக் கையழகையே வியந்து காண்றான். முருகவேளின் தோள் அழகைக்கண்டு இந்தத் தோளின் பராக்ரமத்தாலன்றோ நாம் மங்கல நூல் வாங்காது தாலியுடன் வாழ்கின்றோம் என்று இந்திரன் மனைவி முருகனது தோள் அழகையே பார்ப்பாள்: முருகன் கை வேலழகைப் பார்த்து இந்த வேல் தானே சூராதியரைக் கொன்று நமக்குப் பொன்னுலக வாழ்வைத் தந்தது என்று தேவேந்திரன் அந்த வேலின் அழகையே பார்த்து நிற்பான்: 'உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்" என நக்கீரர் கூறினாரே - அத்தகைய பெருமை வாய்ந்த திருவடிதானே நமக்கு மோகூடி வீடு என உணர்ந்து அடியார்கள் முருகன் திருவடியையே கண்டு களிப்பார்: முருகனுக்கு முன்னழகு போலவே பின்னழகும் உள்ளதே என்று மகிழ்ந்து, குழந்தை முருகன் தன்எதிரில் போகும் போது அக்குழந்தையின் பின் அழகையும் கண்டு பார்வதி உள்ளம் குளிர்ந்து அந்தப் பின்னழகையே கண்டு மகிழ்வாள். நமது ஒளி முருகனது பேரொளி முன் எந்த மூலை என்று சூரியன் அந்தப் பேரொளியையே கண்டு மகிழ்வான்; நிலவே! நீயும் வந்து இவர்களுடன் கூடினால் முருகனது புன்னகை - மந்த ஹாலத்தின் ஒளி அழகைக் கூட்டத்துடன்கூட்டமாய் நின்று காணலாம். இந்தச் சமயத்தைக் கைவிடாதே முருகனுடன் வந்து கலந்து ஆடுதற்கு வருவாயாக" என்பது பொருள் f கண்ணுக்கு ஈட்டி உவமை - "ஈட்டி வளி விழி திட்டி" = திருப்புகழ் 1198