பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 665 நீ எழுந்தருளி வந்த திருஒலக்க வாழ்வைத் தரிசித்த காரணத்தாலே உன்மீது ஆசை கொண்டஇந்தப் பெண்ணுக்கு உன்னுடைய நறுமணம் வீசுவதும் "மார்பில் தங்கி விளங்குவதுமான (தாரை) மாலையைத் தந்து அருள்புரிவாயாக வேலாயுதத்தைக்கொண்டு - (வேலை) கடல் முன்பு சுவற வற்றும்படி - செலுத்தினவனே! வீரம் படைத்த சூரர் குலத்துக்கே யமனாக விளங்கினவனே! இருக்கு யசுர், சாமம், அதர்வணம் என்று சொல்லப்படும் அந்த நான்கு வேதங்களின் பொருளாய் விளங்குபவன் நானே என்று - மார்பினைத் தட்டும் - பெருமை கொள்ளும் பெருமாளே (அல்லது) நான்காகிய (அந்த வேதத்தின்) அழகிய வேதங்களின் பொருளோனே (பொருளாய் விளங்குபவனே) :- சகல கலா வல்லவன் - உயிர்க்கு உயிராய் நிற்பவன் - நான் என்று உயிர்க்குள்ளே ஒளித்து நிற்பவன் - நான்தான் என்று (மார்தட்டும்) பெருமை பாராட்டும் பெருமாளே! (தாரைத் தந்தருள்வாயே) T296. (என்னைத் தனது மலர்ப்- பானங்களால்) பட்டுப் படாத தாக்கியும் தாக்காதது போல (உருவிலியாய் நிற்கும் மன்மதனாலும் அண்டை அயலிலுள்ள மாதர்களின் வசைப் பேச்சாலும் (பழிப்புரைகளாலும்) (தனது கிரணங்களால் உண்மையாகவே எரித்தும்) எரிக்காததுபோல விளங்குகின்ற நிலவாலும் நான் துன்பத்தில் மூழ்கித் தவித்தல் தகுதியோதான்! (தட்டுப்படாத) தடைபடாத - குறைவுபடாத பராக்ரமம் கொண்ட வீரனே! i. தருக்கம் செய்து (வாதித்து) எதிர்த்த அசுர சூரர்களின் குலத்துக்கே யமனாக அமைந்தவனே! (வாதித்த அமண வீரர்களின் குலகாலனே - எனலுமாம்) "வள்ளிக்கு மார்பு மாலையைத் தந்ததைப் பாடல் 316, அடி 5-ல் பார்க்க.