பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 667 அளவுகடந்த திறல் தாழ்வு படாத மயில் வாகனனே வேறு இணையே இல்லாத பெருமாளே! (துக்கத்தில் ஆழ்வது இயல்போதான்) 1297. (அடியான் பொருட்டு - சுந்தரர் பொருட்டு) பரவை நாச்சியாரிடம் எத்தனை முறை (வேண்டுமென்றாலும்) துாது போய்ச் சொல்வதற்கு ஒருப்பட்டவர் தயாராயிருந்தவர் இவர் என்னும் (மான்) பெருமை வாய்ந்தவர் (இம் முருகவேளின் தந்தையாம் சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற உனது மரபுக்கு குலத்துக்கு உச்சித ஏற்ற ப்ரபுவாக தகுதியும் மேன்மையும் கொண்ட பிரபுவாக- (பெரியோனாக) நீயும் விளங்கி வரங்களை (எனக்கு நிரம்பத் தருவதற்கு எழுந்தருளி வருவாயாக (கரடம்) மதம் பாயும் சுவட்டினை உடையவனும், கற்பக விருகூடிம் போல வேண்டுவார் வேண்டுவதே சந்தருள்பவனும் ஆன கணபதியின் தம்பியே! (கலை மான் (கண்) போன்ற (வில்கண்) ஒளி பொருந்தின கண்ணை உடைய குறமகள் (வள்ளியின்) கணவனே! சிவபிரானுக்கு (உற்றது) அழிவிலா உண்மைப் பொருளை உபதேசித்தவனே! பிரமனைக் குட்டின பெருமாளே! (வரம் மெத்தத்தர வருவாயே) 1298. பிறப்பு என்கின்ற அலைகள் வீசும் ஆற்றிலே புகுந்து அலைச்சல் உறாமல் பிரபஞ்ச விஷயங்களாம் மாயா வழிகளிற் பொருந்தி அலைச்சலுறாமல் உறுதி - (நன்மை) ஆன்மலாபத்தைத் தரவல்ல குரு உபதேச மொழியின் பொருள் மூலமாய் O கலை - மான்போன்ற கண் மான்போற் கண் பார்வை பெற்றிடு' . மானை நேர் விழி . விழி மினோ மானோ திருப்புகழ் 89, 886, 328

  • சிவனுக்குப் போதித்தது - பாடல் 327-பக்கம் 314 குறிப்பு

tt அயனைக் குட்டியது - பாடல் 608 பக்கம் சி06 குறிப்புti