உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 677 அடிபடுகின்ற முரச வாத்தியமும், (தவில்) மேளவாத்தியமும் த்திக்க கந்தக்கை (கம் தக்கை) கம் (அடிக்கும்) தொழிற்குரிய தக்கை - ப்பறை (பம்பை வாத்தியம்) துந்துமி - பேரிகை தடம் - ႕# தப்பு பறைவகை இவையுடன் (சல்லிகை) - பெரும் பறைவகை..... கரடிகை - கரடிகத்தினாற் போன்ற ஓசையை உடைய பறைவகை ஒலிக்கப்படும் பறையாம் திமிலை - ஒருவகைப் பறை...... (அபிநவம்) அதிசயிக்கத்தக்க புதுவகையதான சங்கம், ஒற்றை ஒரு தொளைக்கருவி, கொம்பு - ஊது கொம்பு, குழல் - புல்லாங்குழல், இவையெலாம் வங்கம் - மரக்கலங்கள் உலவும், கரியகடல் கொள்ளும், பிரளயம் - பிரளய கால வெள்ளமோ இது என்னும்படி, அதிர்ச்சியை உண்டாக்க உலகில் உள்ளோர் ஹரஹர, சிவசிவ அடைக்கலம், அடைக்கலம் என்று கூச்சலிடும் சப்தமே எங்கும் உண்டாக, கொடிய வேலாயுதம் கொண்டு, (பூதப்) படைகள் உடன் வரத் தேவர்கள் (வனஜ மலர்) தாமரை மலர் போன்றதும் செவ்விய பொன்னாலாகிய் சதங்கையை அணிந்துள்ளதுமான திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே! (அருள்தருவாயே) 1304. கும்பகோணம், (அதனுடன்) திருவாரூர், சிதம்பரம், தேவர்கள் வாழ்க்கை கொள்ளும் சீகாழி, நிலையாகக் கொன்றை மலர் கொண்ட சடையினர் (வாழும்) மாயூரம், அம்பெறு _அழகு (அல்லது ஜலம்) வாய்ந்த சிவகாசி அல்லது அம் - கங்கை நீரும் (சிவ) மங்களகரமும் உள்ள காசித்தலம். "சாமியோடு சரச்சுவதியவள் கோமியும் உறையுங் குடமூக்கிலே" - அப்பர் 522.8 "பலதலத்துள்ளும் சிறந்த மாதலங் கும்பகோணம் " 'தலத்தின் இரும்புகழ்ச் சிரவணம் ஒன்றால் எவ்வெலாத் தலத்தும் வசித்த பேறாதி எய்துவர் யாவரும் மன்னோ" "யாதொரு தலத்து மான்மியங் கேட்டால் இகபர முத்தி முற்றெப்தும், ஒதொரு கும்ப கோணம் அத்தலம் என்றுணருமின்" குடந்தைப்புரா. தலவிசேடம் 8-11. 2. ஆரூர் - திருவாரூர் - இத்தலத்தையும் சிதம்பரத்தையும் முதலடியிற் கூறினதின் காரணம் - சம்பந்தப் பெருமான் அருளிய கேஷத்திரக் கோவைப் பதிகத்தின் தொடக்கம் ஆரூர் தில்லை யம்பலம்' என வருவதே சம்பந்தர் 2.39.1 அப்பர் பெருமானும் தில்லைச் சிற்றம்பலம் என முதற் பாட்டையும் (தொடர்ச்சி 678ஆம் பக்கம் பார்க்க)