உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்த லங்கம் i 95 பள்ளி கெ ாண்டிருந்த திரு. மாலும், திருமாலி ன் கையிலி ருந்த சக்ராயு சங்கமும் - யாவும் சிதறுண்டு மயிலின் காலின்கீழ் வீழ்ந்து கிடப்பனவாகும். (கு உ) சேலார் வயல் செங்கோடு' என்றார் 90ஆம் பாடலிலம் அநந்தன் = ஆதிசேடன். பணிலம் = சங்கு கலபி = மயில் ராசி = கூட்டம் ஆலல் = மயிலின் குரல் ஆலல் = ஒலித்தல். "குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை"- அப்பர் 451 குயில்கூவக் கோலமயில் ஆல' - சுந்தரர் 7-16:8 இந்தப் பாடல் மயிலின் ஆற்றலைப் புலப்படுத்துகின்றது. மயில் அனந்தனைத் தாக்குதல் - சேடன் முடி திண்டாட ஆடல்புரி - மயில்’ "பாரப்பணாமுடி அனந்தன் - பதைபதைத்தே நடுங்க' - என மயில் இத்திலும் ஆதிபகவன் துயில் அனந்தன் மணிசேர், ஆயிரமிருந்தலைகளாய் விரிபணம் குருதியாக முழுதுங் குலைய விந்தறையுமே என மயில் வகுப்பிலும் வருவன காண்க் இப்பாடலின் கருத்தைத் துயில்மலி திருமால் வீழ்ந்து துணுக்கென எழுந்து நிற்ப வெயில்மணி யணைமுடக்கு மெய்நிமிர்ந் தோட ஆடும் மயில் - எனவரும் சீகாளத்திப் புராணத்திற் காண்க - (நக்கீரச் சருக்கம் 117). 98. கதியின்மை கூறல் கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் -- போதவிட்ட விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. (பொ - உ) நற்கதி பெறும்வழி ஒன்றும் எனக்குப் புலப்பட வில்லையே கந்தமூர்த்தியே! வேல் ! (நதி தன்னை அன்ன) காட்டாறு போன்ற (பொய் வாழ்வில்) நிலையற்ற இந்த வாழ்வில், (அன்பாய்) ஆசை கொண்ட வனாய் (நரம்பால் பெர்திந்த) நரம்புகளால் நிரம்பக் கட்டப்பட்ட (பொதிதனையும்) சுமை స్ప్రెస్హో (சுமந்து கொண்டு திண்டாடும்படி (என்னைப்) (பூமியிற்) போகும்படி வைத்த விதியை (நினைத்து) நொந்து நொந்து இங்கே என்னுடைய மனம் வெந்து கொதிக்கின்றது. (சு - உ) ா இந்த நிலையிலா வாழ்க்கையில் திண்டாடும்படி ஏற்பட்ட என் 鷺 நினைந்து எம் மனம் வேகின்றது, நற்கதிபெறும் வழியைக் காண்கின்றேன் இல்லை.