பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தந்தாதி 195 45. தலைவியின் துயரை நாயகன் அறிந்திலன் தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந் தேசம் புகல வளவாரி செற்றவ ணிசற்குப தேசம் புகல ரிகவாச கன்சிறி தோர்கிலன்மாந் தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே. (ப உ) தேசம் - எனக்குறைவிடமும், புகல அடைக்கல ஸ்தானமும், அயிலே என வேலாயுதமேயென்று சொல்லும்படி செய்து, சிறை புக்கு - சிறையிற்பட்டு, ஒரு கம் ஐந்து தலையிலொன்றை, தேசம்பு - இழந்த பிரம்மா, கல - மரக்கலங்களையுடையதும், வன - அழகையுடையதுமான, வாரி செற்றவன் வருணன் ஏவிய கடலை உக்கிரபாண்டியனாகி வற்றச் செய்தோனாகிய, ஈசற்கு - பரமசிவனுக்கு உபதேசம் புகல் உபதேசஞ் செய்த அதிக - மிகுதியான, வாசகன் மொழியையுடைய குமாரக்கடவுளானவன், சிறிது - சற்றும், ஓர்கிலன் அறிந்தானில்லை; மா மாம்பூவாகிய, தேசு - ஒளி தங்கிய, அம்பு - பாணமானது, கலகம் உதவி = கலகஞ்செய் து, மானை மானின் து விழியையுடைய இம்மங்கையுடன், செருச் செய்வது போர் செய்கின்றதை (எறு).அதிக வாசகன்-எழுவாய்.ஓர்கிலன் பயனிலை.ஏ - அசை. * (க.உ) ஒருதலையிழந்த பிரம்மா சிறைபட்டுவேலாயுதமே உனக்கு அடைக்கலம் என்று சொல்லச் செய்தவரும், சமுத்திரத்தை வற்றச் செய்த பரமசிவனுக்கு உபதேசித்த வருமாகிய முருகக்கடவுள் மன்மதனது மாம்பூ வாளி யிம்மங்கை மேல் தைத்துப் போர் செய்வதைச் சற்றும் அறிந்தாரில்லை. தலைவி படுந்துயரை அறிந்திலனே தலைவன் எனத் (1) (یہ - زG) தோழி இரங்கல்: குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா தழகோ திருவிசைப்பா 7.5. 'வஞ்சியுற்ற மயல் தணியும்படிக்கு நினைவாயே திருப்புகழ் 581. ஒருகொடியான. மயில் நெஞ்சொன்றியெ யழல் பொன்றுந் தனிமையை நினையாயோ - திருப்புகழ் 309 (2) ஒருகம் தேசம்பு (பிரமா) - சிறைபுக்கு புகல் - அயிலே என (அத்தகைய வேலால்) வாரி செற்றவன் ஈசற்கு உபதேசம் புகல்வாசகன்-மானைச் செருசெய்வதை ஓர்கிலன்-என அந்வயப்படுத்தவும்.