பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 197 (2) பழைய உரையில் வெட்சிமாலை என்பது பிழை == கடப்பமாலை என்றிருக்கவேண்டும். 8 நித்தியத்வம் பெறப் பகர்ந்த உபதேசத்தைக் திருப்புகழிலும் அருணகிரியார் கேட்கின்றார். "நித்தத்வம் பெறப் பகர்ந்த உபதேசம் சிறியேன் தனக்கும் உரைசெயிற் சற்றுங் குருத்துவங் குறையுமோதான் - திருப்புகழ் 723. (4 சமய சாஸ்திரங்களை வகுத்தவர் இறைவர். மறைத்திற மறத் தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் சம்பந்தர் 3-79.3. 47. முருகனைத் துதித்தால் நித்தியராய் இருக்கலாம் திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி புரத்தும்பத்துத் திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே. (ப உ) திடம் உறுதிநிலை, படு அழிகின்ற, உகத்தும் யுகாந்தத்திலும் கெடீர் நிலைகெடாது நித்தியராயிருப்பீர்கள், கன்ம. பூர்வ வினையால், லோக உலகத்தின் கணுண்டாகிய, சிலுகும் . ஈஷணாத்திரயங்களையும், அச் சோதிடம் படு கத்தும் - அக் கல்விச் செருக்கைத் தருங் கணிதநூலைப் பிதற்றுதலையும்,திரித்து-மாற்றுதல் செய்து, அம்பு முன் இராமபாணத்தை வாலி - வாலியினுடைய உரத்தும்-மார்பிலும், பத்து-பத்தென்கிறதிடம்-வலிமை பொருந்திய, கத்தும் இராவணனுடைய தலைகளிலும், தெறித்தான் - செலுத்திய புரீராமருடைய, மருக - மருகோனே! திருகு மாறுபட்ட மும்மதிள் - முப்புரங்களும், தம்படு தோற்றிய இடத்திலேயே, உக நீறாகிவிழ, துங்க உயர்ந்த நகம் மகமேருவை, குனித்தவன் - வில்லாக வளைத்த பரமசிவனது, சேய்எனும் மைந்தனாகிய குமாரக் கடவுளென்று துதியுங்கள். (எறு) நீங்கள் தோன்றா எழுவாய்.கெடீர் பயனிலை, ஏஅசை (க உ) நமர்காள்! நீங்கள் ஈஷணாத் திரயங்களையும் சத்தமுஞ் சோதிடமுமாகிய நூல்களைப் பிதற்றுதலையும் ஒழித்து,