பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 207 தொழத்தக்க சரவண முத்தானவனே மறையோர் செய்யும் யாகத்தின் அவிர்ப்பாகத்திற்கு உரியவனே! குறிஞ்சி நிலத்திற்கு இறைவனான கந்தனே என்று துதித்தால் உனது தீமைமாத்திரமல்லசனனமரணமும் அறும் (கு-உ () முருகனுடைய திருநாமங்களைக் கூறித் துதிப்பதன் பயனைக்கூறுகின்றது.இப்பாடல்.பாடல்30ம் பார்க்க (2) ஒமரண முருகவேள் "யாக ரக்ஷக மூர்த்தி" எனப்படுவர், "ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே"-திருமுருகாற்றுப்படை 56. தலைவி வருந்துதல்: மன்மதோபாலம்பனம் - விரகவேதனை தென்ன வனங்கணஞ் சூழ்காத் திரி நக சூலகரத் தென்ன வணங்கனந் தப்பத நீட்டிணன் செல்வமுன்பின் தென்ன வணங்கனன் னிற்றாற் றிருத்திய தென்னவின்னத் தென்ன வ:ைங்கணங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே. (ப-உ) தென்ன வனம் - தென்னஞ் சோலைகளையும், கனம் - மேகங்கள், சூழ் - கவிந்திராநின்ற, கா - பூஞ்சோலைகளையுமுடைய, திரிநக திருத்தணி, பரங்குன்று, செங்கோடு என்னும் மூன்று மலைகளையும் உடையோனே! சூல கர கையிற் சூலாயுதத்தையுடைய, தென்னவன் - தென்றிசைத் தலைவனாகிய யமனது, அங்க னந்த . உருவழியும்படி பத நீட்டினன். திருப்பாதத்தை நீட்டியுதைத்த பரமசிவனது, செல்வ-மைந்தனே! முன் முற்காலத்தில், பின் - பின்னே கூனையுடைய, தென்னவன் பாண்டியனது, அங்க - உடலை, நன்னிற்றால் நன்மையைத் தரும் விபூதியினால், திருத்திய தென்னை - நிமிர்த்தனதுபோல, இன்னம் - இப்போதும் தென்ன வனப்புவாய்ந்த அனங்கன் - மன்மதனது, அம் அழகிய, கை கையிற் பிடித்த சிலை - கருப்பு வில்லினது, கூனையும் வளைவையும், தீர்த்து நீக்கி, அருள் . மதன் என்மேற் பாணப் பிரயோகஞ் செய்யாதபடி உன் மாலையைத் தந்தருளவேண்டும். (எ று) நீ - தோன்றா எழுவாய் தீர்த்தருள் - பயனிலை.ஏ-அசை