பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 209 ப்ரயோகம் செய்யாதபடி நீ கருணை கூர்ந்து உனது மாலையைத் தந்து தணித்தருள் என்றபடி ஆவா என்னே தென்னவர் கோற்கன் றணிசாந்தம் நீவா நின்றாய் நின்றில காமா னலமென்னே கோவாம் வில்லி கொடுந்தனு வுங்கூன் நிமிராதால் மூவா முதலார் மதுரையி தன்றோ மொழிவாயே எனவரும் மதுரைக் கலம்பகத்துப் பாடல் (66)ம். பாலனார், தைவந்து தென்னவர் கூன் தள்ளுதிருப் பாட் டெடுத்தால் கைவந்த வேள் சிலைக்கூன் கானுமோ எனவரும் திருவாரூர் உலாவும் (416)இங்கு நினைவுக்குவரும் 57. தோத்திரம் தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத் தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல் தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே. (ப-உ) தீத்தன் - கிரணங்களையுடைய சூரியன், பரவு சஞ்சரிக்கின்ற,ஐ-அழகிய,வெளி-ஆகாசத்தையும்,நீங்கி-கடந்து,சேப்பிள்ளையாகியபிரமாவும், தொழ - வணங்கும்படி, செல் - சென்று, பத வுத்தித்தன்-பாதத்தையூர்த்ததாண்டவமாகஎடுத்ததிருமாலும்,பரவை. சமுத்திரமும், முறையிட அலறுகையில், மா மாவுருக்கொண்டு நின்ற சூரனால், குறை உண்டான குறைபாட்டையும், தீங்கு தீமையையும், உறவே - முழுதும், தீத்து அற்றுப்போகும்படி யொழித்து, அன்பர் அடியார்களுடைய, அவை கூட்டம், தழைக்க- அதிகரிக்கும்படி விண் அமராபதியை,காவென-காப்பாற்றென்றுசொல்லி,சென்னியின்மேல் - முடியின்மேல், தீத்தன் கங்கையைச் சூடிய பரமசிவன், பரவுதுதித்த ஐயில் - கூரிய, வேல் - வேலாயுதத்தை அத்தனே கரத்திலுடைய முருகக்கடவுளே! குருசீலத்தனே குருவாகிப் பரமசிவனுக்குப் பிரணவப் பொருளையுபதேசித்தநற்குணக் குன்றமே (எ-று) (க.உ) திருநெடுமால் முறையிடுகின்றதைக் கண்டு சமுத்திரத்தின்கண் மாவுருக்கொண்டு நின்ற சூரனை வதைத்துப் பத்தர்