பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு.உ) (1) அசுரர்கள் செய்த கொடுமையைச் சிவபிரானிடத்தில் தேவர்கள் முறையிட்டது: வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி. - கந்தர் கலிவெண்பா -76, (2) வேலை - நீதி சத்தி என்றார் ஆராயும் நீதி வேல்' திருப்புகழ்350 பக்கம்.377-கீழ்க்குறிப்பு (3) விதிர்த்தல்-அசைத்தல் "மலர்க்கமல கரத்தின் முனை விதிர்க்க: . வேல் வகுப்பு. திருக்கை விதிர்க்கும் தனிவேலா திருப்புகழ். 105. (4) நித்திலத்தொத்து-சம்பந்தர் 2102.11:2.104.4 62. வினையால் வருந்துவது ஏன் திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந் திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித் திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே. (ப-உ) திலமும் . எள்ளும், தயிலமும் எண்ணெயும், நிகர ஒப்பாக,எங்கும்-எவ்விடங்களிலும்,திகழ்தரு. நிறைந்து விளங்குகின்ற, செந்தில் - திருச்செந்திற் பதியோனே! முந்து ஆயுதவருக்கங்களின் முதன்மையான, அயில வேலாயுதத்தையுடையவனே! முருகா - குமாரக்கடவுளே! எனாது - என்று துதித்து ஓலமிடாது. அத்தி தெய்வயானை நாயகியினது,நகை-தந்தமாகிய, இன் -இனிய,நித்திலம்முத்தானது, உந்து செலுத்துகின்ற, அயில் நுகரப்பட்ட அமுதத்தால் அதராவமுதத்தால், உருகிய குழைந்த சித்த இருதயத்தை யுடையோனே! என் - என்ன காரணம், ஏதிலம் - (வழியடிமை யாகிய யாம் ) அயலோர்போல, முந்தயில் முற்சனனத்தினால் வந்த அகல பெரிதான, வினை மேவி தீவினையுற்று, தியங்குவது வருந்துகின்றது. (எ-றுதியங்குவது- எழுவாய்.என்- பயனிலை.ஏ-அசை (க-உ) தெய்வயானை நாயகியின் அதரபாணத்தால் உருகும் இருதயனே எங்கும் எள்ளும் எண்ணெயும்போல் நிறைந்து விளங்குகின்றவனே! முருகனே! வேலாயுதனே செந்திற்பதியோனே!