பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 221 (கு.உ) (1) உன் மயில் வாகனத்தை ஏவி என் வினைக் குன்றைப் பொடிபடச்செய் - எனவும் பொருள் காணலாம். மயில் மலையையும் பொடிபடுத்தும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க "படர் சக்ரவாளகிரி துகள்பட வையாளி வருமயில்" - மயில் விருத்தம் - 4.7 (2) சுசிகர-"அக்னிகரமீதிற் ப்ரபாகரனும்".வேடிச்சிவகுப்பு "தீக்கடவுள் சீதப்பகிரதிக்கே சென்றும்ப்ப - கந்தர் கலிவெண்பா. 67. நலம்புனைந்துரைத்தல் (கண்ணயந்துரைத்தல்) சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச் சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ் சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே. (ப-உ) சிகண்டி - மயில் வாகனத்தை தத்த சதி பாய்ந்து செல்லும்படி, தமர முழங்குகின்ற, வாரி - சமுத்திரத்தின்கண், விட்டு - நடத்தி, அ - அந்த திதி திதியினுடைய, புத்ர ராசி - பிள்ளைகளாகிய அசுரக் கூட்டங்களை, கண்டித சேதித்தவனே தத்த தந்தத்தையுடைய, நக பூதர பாம்பு போன்ற திருச்செங்கோட்டுக் கதிபனே! தெய்வ தெய்விகமான, வள்ளிக் கொடிச்சி - குறமாதாகிய வள்ளிநாயகியை, கண்டு-பார்த்து.இதத்து-இதமாக.அத்தமலர்-உன் கைகளாகிய மலரை மேற்குவித்து - சென்னிமேற் கூப்பி, இடை - பெண்ணே உன்னிடையானது, செப்பு - சிறப்பித்துச் சொல்லத்தக்க உரு வடிவமாகிய, வஞ்சி - வஞ்சிக்கொடியே கண் - விழி, தி.த - நிலைபெற்ற, தத்து - ஆபத்துகளெல்லாம், அகல் - நீங்குகின்ற, தபோபலம் - (விரகாக்கினியைத் தணித்தலால் நான் செய்) தவத்தின் பயனே, என்னும் என்று நலம்புனைந் துரைக்கும், சேகரனே - தலைவனே! (எ-று) - (க.உ) சமுத்திரத்தின்கண் மயிலேறிச் சென்று அசுரர்கிளையை மாய்த்தவனே! திருச்செங்கோட்டு மலையதிபனே! வள்ளிநாயகியை