பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 233 (2) வண்டு. பழம்பூவை விரும்பாது, அதுபோல, பாணனே! நான் தலைவனுக்குப் பழையவள் ஆய்விட்டேன் - ஆதலால் அவர் என்னை இனி விரும்பார்: நீ என்னைப் புகழ்ந்து பாடவேண்டாம் அந்தத் தலைவனையே பாடு இது "பாணனொடு வெகுளுதல்" என்னும் துறை (வாயில் மறுத்துரைத்தல்) மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட மின்னிடை மடந்தை வெகுண்டுரைத்தது. பொன்மாலைமார்பன் என்புதுநலமுண்டிகழ்வானோ'என்னும் அப்பர் திருவாக்கு(4.121)ஈண்டுநினைவுக்குவரும் இது தேர்ந்துரையே - என்பது பழம்பூவை வண்டு என்றும் விரும்பாது:இந்த உண்மையை ஆய்ந்தறிந்து என்னுடன் பேசு-எனவும் பொருள் தோன்றும் 77. முருகனைத் துதியுங்கள் தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான் தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால் தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத் தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. (ப-உ) தேரை - தேவர்களெல்லாம் கூடிச்செய்த தேரை விட அச்சுமுறியும்படி, பணி செய்து, ஏறு-இடபவாகனத்தின் மேல், ஏறி இவர்ந்து, முப்புரம் - திரிபுரத்தை செற்ற நகைத்தெரித்த பிரான் - பரமசிவனுக்கு தேர் - பிரணவப்பொருள் தெளியச்செய்த ஐ சுவாமியே! : - சொல்லத்தக்க தப்பு குற்றத்தால், அணி - நெருங்கிய, சூராரி - சூரசங்காரனே! என்க. - என்று துதிக்கக் கடவீர்கள், தெரிவையர்பால் காமவாஞ்சையால் பரத்தையரிடத்தில், தேரை - தேரையானது, விட விஷத்தையுடைய, பணி - பாம்பினது, வாய் வாயில், படுமாறு அகப்பட்டாற்போலும், செறிந்து சிக்கிக்கொண்டு அலகைத் தேரை - பேய்த்தே ரென்னுங் கானலை விடு - ஊறுகின்ற, அப்பு - சலமானது, அணித்தென்று சமீபமாயிருக்கின்ற தென்று. என்றும் ஓடி எப்போதும் ஓடியோடி, திரிபவரே அலைந்து திரிகின்றவர்களே. (எறு) நீங்கள் - தோன்றா எழுவாய் என்க - பயனிலை (க.உ) பாம்பின் வாய்ப்பட்ட嵩醬 மாதரது மயக்கத்தி லகப்பட்டுக் காணலை நீரென்றெண்ணிச் செல்பவர் போல் அவர்கள்